செல்லிடப்பேசியுடன் ஆதார் இணைக்கும் பணி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 4 September 2017

செல்லிடப்பேசியுடன் ஆதார் இணைக்கும் பணி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரம்

செல்லிடப்பேசி இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முனைப்பில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

பிப்ரவரி 6ஆம் தேதிக்குள்...:

பிரீ பெய்டு வாடிக்கையாளர்கள் (முன்கூட்டியே பணம் செலுத்தி சேவை பெறும் வாடிக்கையாளர்கள்), போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் (சேவைக்கு பிறகு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள்), புதிய வாடிக்கையாளர்கள் ஆகியோர் ஆதார் மூலம் இணைக்கப்பட உள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி 6}ஆம் தேதிக்குள் செல்லிடப்பேசி}ஆதார் இணைக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லா சேவைகளிலும் ஆதார் எண்ணை இணைப்பதில் மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது. வங்கி சேவை, எரிவாயு இணைப்பு உள்பட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கும் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது நிரந்தரக்கணக்கு எண்ணை(பான் கார்டு) ஆதாருடன் இணைக்க டிசம்பர் 31}ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செல்லிடப்பேசி இணைப்புகளையும் ஆதாருடன் இணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 6}ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பி.எஸ்.என்.எல். ஏர்டெல், ஏர்செல் உள்பட பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரிடம் ஆதார் எண்ணை பெற்று, இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், வோடபோன், ஏர்செல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது. அதுபோல், வாடிக்கையாளர் சேவை எண்ணிலும் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏர்செல் நிறுவத்தை சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறியது: முன்பு, ஒரு தொலை தொடர்பு நிறுவனத்தின், ப்ரீ பெய்டு சேவை பெறுவதற்கு, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் சமர்ப்பிக்க வேண்டும். அதுபோல, "போஸ்ட் பெய்டு' இணைப்புப் பெறுவதற்கு, எல்லா தகவலும் பெற்று, மின்னஞ்சல் மூலம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அடுத்த நாளில் பயன்பாட்டுக்கு வந்து விடும். ஆனால், இப்போது கே.ஒய்.சி (உங்கள் வாடிக்கையாளரை அறிதல்) அடிப்படையில் தகவல் பெறப்படுகிறது. இனி, ஆதார் எண் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது பிரீபெய்டு சேவை பெறுவோர்களிடம் ஆதார் பெறப்படுகிறது. சந்தாதாரரின் செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்த பிறகு, ரகசிய எண் கொடுக்கப்படும். அடுத்து, ஆதார் எண் குறிப்பிட்டு, விரல் ரேகை பதிவு செய்யப்படும். சில மணி நேரத்தில், சேவை செயல்பாட்டுக்கு வந்துவிடும். விரைவில், "போஸ்ட் பெய்டு' வாடிக்கையாளர்களும் இணைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
செல்லிடப் பேசியுடன் ஆதார் இணைப்பு நடவடிக்கையால், போலியான செல்லிடப்பேசி எண்கள் குறையும். இதன் பாதுகாப்பு அதிகரிக்கும். சைபர் குற்ற நடவடிக்கைகள் குறையும். முன்பு, ஒருவர் 9 சிம்கார்டு வரை வைத்துக்கொள்ளலாம். யார் பெயரிலும் வாங்கி பயன்படுத்தும் நிலை இருந்தது. இப்போது, ஒருவர் 5 சிம்கார்டு வரை வைத்துக்கொள்ள முடியும். இனி அனைத்து விவரங்களும் அதில் அடங்கிவிடும். ஒருவர் சிம்கார்ட்டை மற்றொருவர் பயன்படுத்த முடியாது.
தவறான நபர்கள் கையில் சிம்கார்டுகள் கிடைப்பது தடுக்கப்படும். தேவையற்ற எண்களை துண்டிக்கவும் முடியும் என்றார் அவர்.

இந்தியாவில் பி.எஸ்.என்.எல். ஏர்டெல், ஜியோ, ஏர்செல் உள்பட 10}க்கும் அதிகமான தொலைதொடர்பு நிறுவனங்கள் உள்ளன. 2016ஆகஸ்ட் மாதத்தின் கணக்கெடுப்பின்படி, உலகில் தொலைபேசி(செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி) பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. சுமார் 100 கோடி வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளனர். இதுபோல, இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையிலும் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: அரசு வழங்கும் மானியத்தை முறையாக வழங்குவது, பல்வேறு திட்டங்களை இணைக்கும் நோக்கில் ஆதார் கொண்டு வரப்பட்டது. தற்போது, எல்லா சேவையிலும் இணைக்கப்பட உள்ளது. குறிப்பாக, செல்லிடப்பேசி எண்களும் ஆதாருடன் இணைக்கப்பட முயற்சி எடுக்கப்படுகிறது. இது வரவேற்கக்கூடியது.
அதை நேரத்தில், பொதுமக்களின் அச்சத்தை போக்கி, தனிமனித உரிமை, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தொழில்நுட்ப வலைபதிவாளர் சைபர் சிம்மன்தெரிவித்துள்ளார்.


Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot