‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 16 September 2017

‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை

உயிர்கொல்லி விளையாட்டான ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் எவ்வாறு காப்பது என்ற வழிமுறைகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை நேற்று வெளியிட்ட அறிவுரை விவரம்:
‘ப்ளூ வேல்’ சேலஞ்ச் என அழைக்கப்படும் ‘ப்ளூ வேல்’ இணையதள விளையாட்டு 50 நாட்களுக்கு தொடர்ந்து ஆபத்தான கட்டளைகளை நிறைவேற்றிய பிறகு இறுதியாக தற்கொலைக்கு தள்ளும் வகையில் உள்ளது. இதற்கு பதின் பருவத்தினரும் இளைஞர்களும் இலக்காகிறார்கள்.அதிகாலை 4.20 மணிக்கு எழுவது, பயங்கர (பேய்)படங்களைப் பார்ப்பது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது, திமிங்கிலத்தின் உருவத்தை கை, கால்களில் வரைந்து கொள்வது என விளையாட்டில் கட்டளைகள் வழங்கப்படுகின்றன. மேலும் விளையாடுவோரின் சமூக வலைதள நண்பர்களையும் இது விட்டுவைப்பதில்லை.

பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றம்

‘ப்ளூ வேல்’ கேம் விளையாடும் இளைஞர்களிடம் திடீரென ஏற்படும் குணமாற்றமான, தங்களதுநண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விலகிச் செல்வது, சோகமாக இருப்பது, அடிக்கடி கோபம், வழக்கமாக செய்யும் செயல்களில் ஆர்வம் குறைவு, நள்ளிரவு சுற்றித் திரிவது, இணையதளத் தில் அதிக நேரம்செலவிடுவது, தங்கள் செயல்பாடுகளை ரகசியமாக வைத்திருப்பது போன்ற செயல்களை வைத்து கண்டறியலாம். மேலும் உடலில் திடீர் காயங்கள் ஏற்பட்டாலும் ப்ளூ வேல் விளையாட்டின் அறிகுறியாகக் கருத வேண்டும்.

பெற்றோர் செய்ய வேண்டியது

‘ப்ளூ வேல்’ கேமில் இருந்து தங்களது பிள்ளைகளைக் காப்பாற்ற, அவர்களின் சமூக வலைதள செயல்பாடுகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் இணையதளத்தில் அவர்கள் பயன்படுத்திய இணையதள முகவரிகளை (History) சோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு வரும் குறுஞ்செய்திகள், அழைப்புகள், முகநூல், ஸ்நாப்சாட், வாட்ஸ்அப்போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். தேவையற்ற செயலிகள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.தற்கொலை எண்ணம் வந்தவர்கள் மனஅழுத்தத்துடன் இருப்பார்கள். அதனைக் கண்டறிய வேண்டும். செல்போன்களில் உள்ள பிளே-ஸ்டோர் செயலியில் ‘பேரன்டல் கன்ட்ரோல்’வசதியை ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதுடன், வெளி விளையாட்டுகளில் அவர்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும்.இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot