கல்விதுறைக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது : முதல்வர் பழனிசாமி பேச்சு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 5 September 2017

கல்விதுறைக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது : முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் ஆசிரியர்கள் தின விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். எனக்கு கல்வி அறிவு புகட்டிய ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி என முதலமைச்சர் பழனிசாமி உரையாற்றியுள்ளார்.
ஜெயலலிதா வழியில் கல்விதுறைக்கு மாநில அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆசிரியர் தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை முதல்வர் வழங்கினார். மேலும் இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 26,932 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 6 ஆண்டுகளில் 40,633 ஆசிரியர்கள், 15,153 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

3,336 முதுகலை மற்றும் 748 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5.40 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். கோவையில் ஆசிரியர்கள் தங்கும் இல்லம் ஏற்படுத்தப்படும், மேலும் மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஒழிக்கப்பட்டுள்ளது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

மாணவர்களுக்கு ஊக்க தொகை, இலவச பயண அட்டை அளித்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். பள்ளிகல்வியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 செங்கோட்டையன் பேச்சு

மத்திய அரசு பாராட்டும் வகையில் தமிழகத்தின் பள்ளி கல்வித்திட்டம் உள்ளது என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தாய், தந்தைக்கு பிறகு ஆசிரியர்கள் கடவுளாக பார்க்கப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார். 

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot