ஊதிய உயர்வு ஏமாற்ம்: நாளை ஜாக்டோ-ஜியோ அவசர ஆலோசனை

தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு குறித்து நாளை ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்துகிறது.தமிழக அரசு ஊழியர் சம்பளம், 10 முதல், 20 சதவீதம் வரைஉயர்த்தப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று, சம்பள உயர்வு வழங்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் பிற்பகல் 2 மணிக்கு அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

Most Reading