17 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் 'ரெடி' - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 1 November 2017

17 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் 'ரெடி'

கோவை : கோவை மாவட்டத்தில், 17 ஆயிரத்து 539 இலவச லேப்டாப்கள் பள்ளிகளுக்கு, நேரடியாக அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுக்க, கடந்த 2015-16 கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்போது இலவச லேப்டாப் வினியோகிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், 131 அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மூலம், நேரடியாக லேப்டாப் வினியோகிக்கப்பட்டது. அசல் மதிப்பெண் சான்றிதழ் பின்புறம், லேப்டாப் பெற்றதற்கான குறிப்பை, பதிவு செய்து மாணவர்களுக்கு வினியோகிக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'இலவச லேப்டாப் பெற, தகுதியுள்ள மாணவர்களுக்கு, பள்ளிகளில் இருந்து தகவல் அளித்துள்ளோம்.இவர்கள், தற்போது கல்லுாரிகளில், இரண்டாமாண்டு படித்து வருவதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பதில், காலதாமதம் ஏற்படும். எனவே, வரும் ஜனவரி மாதம் முடிய, இலவச லேப்டாப் விநியோகிக்கப்படும்.இதனால், மாணவர்கள் பதற்றம் கொள்ள தேவை யில்லை' என்றனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot