நிறுவனங்களில் 3 மாதம் பயிற்சி பெறுவது கட்டாயம் என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 24 January 2018

நிறுவனங்களில் 3 மாதம் பயிற்சி பெறுவது கட்டாயம் என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டம்

என்ஜினீயரிங் துறையில் தற்போதைய தேவைகளைபூர்த்தி செய்யும் வகையில், என்ஜினீயரிங் மற்றும்தொழிற்கல்வி பாடத்திட்டத்தை அகில இந்தியதொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) மாற்றிஅமைத்துள்ளது.
இந்த புதிய பாடத்திட்டத்தை மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்றுடெல்லியில் அறிமுகப்படுத்தி வைத்தார்.புதிய பாடத்திட்டம், எழுத்துபூர்வ கல்வியை விடசெய்முறை கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகஅமைந்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதன்படி, எழுத்து தேர்வில் பெற வேண்டிய கிரெடிட்கள்(மதிப்பீட்டு புள்ளிகள்) எண்ணிக்கை 220-ல் இருந்து 160 ஆககுறைக்கப்பட்டுள்ளது. கோடைக்கால பயிற்சியில்,160 கிரெடிட்களில் 14 எடுப்பது கட்டாயம் ஆகும்.தொழிற்கல்வி முடித்து வெளியேறும் மாணவர்களில் 60சதவீதம் பேர், தொழில்துறைக்கு தேவையான தயார்நிலையில்இல்லை என்று புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள்தங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.இதை கருத்தில் கொண்டு, என்ஜினீயரிங் மாணவர்கள்அனைவரும் தங்களது படிப்பு காலத்தில் ஒரு நிறுவனத்தில்2 முதல் 3 மாதங்கள் பயிற்சி பெறுவது புதிய பாடத்திட்டத்தில்கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையாகஇருந்தாலும் அவர்கள் பயிற்சி பெற வேண்டும். இதன்மூலம்,அவர்கள் வேலைவாய்ப்புக்கு தேவையான திறமைகளைபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், தொழிற்கல்வியில் சேர்ந்தவுடன், தொழிற்கல்விக்குதேவையான மொழி புலமையையும், அடிப்படைநுணுக்கங்களையும் பெற ஒவ்வொரு மாணவரும்கட்டாய புத்தாக்க பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள்என்றும் புதிய பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், ஆலோசனை குழுக்களைஅமைத்து,பாடத்திட்டத்தில் ஆண்டுதோறும் மாற்றம்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசிய மத்தியமந்திரி பிரகாஷ் ஜவடேகர், பாடத்திட்டத்தை ஆண்டுதோறும்மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot