பள்ளி கல்வியின் கவர்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 30 January 2018

பள்ளி கல்வியின் கவர்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு

பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அமைச்சர் செங்கோட்டையன் தீவிரப்படுத்தி உள்ளார். புதிய பாடத்திட்டப்படி, தரமான புத்தகங்கள் தயாரிப்பது, சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத்திட்ட அம்சங்களை, புத்தகங்களில் இடம் பெற செய்வது போன்ற, பணிகள் நடந்து வருகின்றன.பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது; புதிய கல்வி ஆண்டில் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் என்ன என்பது குறித்தும், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று, துறையின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், ராமேஸ்வர முருகன் உட்பட, பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் முறையை, ஆன்லைனுக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்துக்கு,மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறுதல், பள்ளிகளில் பயோமெட்ரிக் திட்டத்தை விரிவுபடுத்துவது என, பல்வேறுதிட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.ஏற்கனவே, 26 ஆயிரம் கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிலையில், பாடத்திட்ட மாற்றம் உட்பட, புதிய திட்டங்கள் உள்ளதால், 30 ஆயிரம் கோடி வரை, நிதிஒதுக்கீட்டை உயர்த்தி கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot