பாரத ஸ்டேட் வங்கி டெபாசிட் வட்டி மாற்றம்!!!

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) டெபாசிட் வட்டியில் மாற்றம்செய்துள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள டெபாசிட்களுக்கான வட்டி 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுக்குள் உள்ள டெபாசிட்களுக்கு வட்டி 0.15 சதவீதம் உயர்த்தி 6.5 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும், 2 ஆண்டில் இருந்து 10 ஆண்டு வரை 0.5 சதவீதம் அதிகரித்து 6 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.ஒரு கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை மேற்கொள்ளும் டெபாசிட்களுக்கு ஓராண்டில் இருந்து 2 ஆண்டு வரை 6.25 சதவீதத்தில் இருந்து 6.75 சதவீதமாகவும், 2 ஆண்டுக்கு மேல் 3 ஆண்டு வரை உள்ள டெபாசிட்களுக்கு 0.75 சதவீதம் உயர்த்தி 6.75 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 கோடிக்கு மேல் உள்ள டெபாசிட்களுக்கு ஓராண்டில் இருந்து 2 ஆண்டு வரை 0.5 சதவீதம் உயர்த்தி 6.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
 

Most Reading