வாட்ஸ் அப்பில் 'லாக்டு ரெக்கார்டிங்ஸ்' எனும் புதிய அம்சம் இணைப்பு: என்ன யூஸ் தெரியுமா? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 5 April 2018

வாட்ஸ் அப்பில் 'லாக்டு ரெக்கார்டிங்ஸ்' எனும் புதிய அம்சம் இணைப்பு: என்ன யூஸ் தெரியுமா?


பில்லியன் கணக்கான பயனர்களால் அதிகம் கேட்கப்பட்ட ஒரு வாட்ஸ்ஆப் அம்சமானது இன்று வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
அது வேறொன்றுமில்லை - லாக்டு ரெக்கார்டிங்ஸ் (Locked Recordings) என்கிற அம்சம் தான்.வாட்ஸ்ஆப்பின் பீட்டா சமீபத்திய பதிப்பான பதிப்பான2.18.102-ல் இந்த புதிய அம்சமானது ஏகப்பட்ட ஆடியோ மெஸேஜ்களை அனுப்பும் பயனர்களுக்கு மிகவும் வசதியான ஒரு அம்சமாகும்.

வழக்கமாக வாட்ஸ்ஆப் வழியாக ஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப, சாட்டில் உள்ள ரெகார்ட் பட்டனை தொடர்ச்சியாக அழுத்தி, பேசி முடித்தபின்னர் பட்டனை ரிலீஸ் செய்வோம். அல்லவா.?இனி அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு வாய்ஸ் ரெகார்டட் மெஸேஜை அனுப்ப ரெகார்ட் பட்டனை ஒருமுறை அழுத்தி ரெகார்ட் செய்யலாம்.

ரெகார்ட் செய்து முடித்த பின்னர் மறுபடியும் ஒருமுறை அழுத்தினால் போதும். அதாவது ரெகார்ட் செய்ய இனி தொடர்ச்சியாக ரெக்கார்ட் பட்டனை அழுத்த வேண்டியது இல்லை என்று அர்த்தம்.ஒருவழியாக, வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய லாக்டு ரெக்கார்டிங்ஸ் அம்சமானது தற்போது வரையிலாக சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் மட்டுமே கிடைக்கிறது. எப்போது நிலையான ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்பது பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை.

பீட்டா தளம் என்பது ஒரு இறுதிக்கட்ட சோதனை தளம் என்பதால், இந்த அம்சம் மிக விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும். ஒருவேளை வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு பயன்படுத்தியும் கூட, லாக்டு ரெக்கார்டிங்ஸ் அம்சம் கிடைக்கவில்லை எனில், கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று, சமீபத்திய பதிப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot