தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இடி, மின்னல் உடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, காற்றுடன் மழை பெய்யும். மேலும் திருச்சி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
 

Most Reading