CTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 17 June 2018

CTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் ஆசிரியர் பணிக்கான விருப்ப பட்டியலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை தென் இந்தியாவில் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் கேந்திர வித்யாலாயா மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்ய சிடிஇடி எனப்படும் மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான 2 தேர்வுகளில் ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் இரண்டை தேர்வு செய்து பதிலளிக்க வேண்டியது கட்டாயமாகும். இதுவரை ஆங்கிலத்தை முதன் மொழியாகவும், தமிழை அல்லது பிராந்திய மொழியை 2-வது மொழியாகவும் பெரும்பாலானோர் தேர்வு செய்து வந்தனர்.

இந்நிலையில் ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் ஏதேனும் 2 மொழியையே தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் தென் இந்திய மாநிலங்களில் உள்ளவர்கள் குறிப்பாக தமிழர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே சிபிஎஸ்இ.யில் இந்தி பயின்றவர்களுக்கும், சரலமாக இந்தி பேசும் வடமாநிலவர்களுக்கும் போட்டி போட முடியாத நிலையே உள்ளது. எனவே பிராந்திய மொழிகளை
நீக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கவே பிராந்திய மொழிகளை தேர்வு பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot