பிளஸ் 1 தேர்வில் தான் மாற்றம் - பிளஸ் 2க்குஇல்லை:பள்ளிக்கல்விசெயலர் உதயசந்திரன் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 23 May 2017

பிளஸ் 1 தேர்வில் தான் மாற்றம் - பிளஸ் 2க்குஇல்லை:பள்ளிக்கல்விசெயலர் உதயசந்திரன்

வரும் கல்வியாண்டில்,பிளஸ் 2 தேர்வில், எந்தவிதமாற்றமும் இல்லை; பழையமுறையே பின்பற்றப்படும்'என, பள்ளிக்கல்வித் துறைஅறிவித்துள்ளது.
வரும்,2017 -18ம் கல்வி ஆண்டுமுதல், பிளஸ் 1 வகுப்புக்கு,கட்டாய பொதுத் தேர்வுஅறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.இதன்படி, வரும் கல்விஆண்டில் புதிதாகசேரப்போகும், பிளஸ் 1மாணவர்களுக்கு, மொத்தமதிப்பெண், 600 ஆககுறைக்கப்பட்டு உள்ளது.இந்த மாணவர்கள், 2018 - 19ல், பிளஸ் 2 செல்லும்போது, பிளஸ் 1ல் எழுதியதுபோன்று, மொத்தம், 600மதிப்பெண்களுக்கு தேர்வுஎழுத வேண்டும்.இறுதியில், 1,200மதிப்பெண்களுக்கு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2க்கான,ஒருங்கிணைந்தமதிப்பெண் பட்டியல்வழங்கப்படும்.இந்நிலையில், தற்போதுபிளஸ் 1 முடித்து, பிளஸ் 2செல்லும் மாணவர்களுக்கு,தேர்வு முறையில் மாற்றம்உள்ளதா என்ற குழப்பம்ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, பள்ளிக்கல்விசெயலர் உதயசந்திரன்கூறியதாவது:மார்ச்சில் நடந்த ஆண்டுஇறுதி தேர்வை முடித்த,பிளஸ் 1மாணவர்கள், வரும்கல்வி ஆண்டில், பிளஸ் 2படிக்க உள்ளனர்.அவர்களுக்கு, தேர்விலோ,மதிப்பெண் முறையிலோ,தேர்வுக்கான நேரத்திலோமாற்றம் இல்லை.

தற்போதுநடைமுறையில் இருக்கும், 1,200 மதிப்பெண்களுக்கு,கடந்த ஆண்டுகளில்பின்பற்றப்பட்டமுறைகளிலேயே,அவர்களுக்கு தேர்வுநடக்கும். மூன்று மணிநேரம் தேர்வு எழுதவேண்டும்.தேர்வு முடிவில், பிளஸ் 2க்குமட்டுமே, மதிப்பெண்சான்றிதழ் வழங்கப்படும்.எனவே, இந்தாண்டு பிளஸ்2 படிக்க உள்ள மாணவர்கள்,இதில் எந்த குழப்பமும்அடையவேண்டாம்.இவ்வாறு அவர்கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot