மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் திட்டத்தை கைவிடுவதாக சிபிஎஸ்இ உள்பட 32 கல்வி வாரியங்கள் கடந்த மாதம் அறிவித்தன.
இதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், சிபிஎஸ்இ-யின் முடிவை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் உண்டு என்று அறிவித்துவிட்டு, தேர்வு முடிந்த பிறகு அந்த மதிப்பெண் கிடையாது என்று சிபிஎஸ்இ அறிவித்தது நியாயமற்றதும், பொறுப்பற்றதுமான செயல் என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து, புதன்கிழமை வெளியிடப்படுவதாக இருந்த சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் உயர் நிலைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை சிபிஎஸ்இ மூலம் அணுக முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி கூறியதாவது:
தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஆய்வு செய்து வருகிறோம். 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவை தாமதமின்றி வெளியிட அனைத்து வழிகளையும் யோசித்து வருகிறோம் என்றார்.
இதனிடையே, 6 மாநிலங்களில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதனால், அந்த மாணவர்களின் கல்லூரி சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

No comments:
Post a Comment