பிளஸ் 2 தேர்ச்சி விகித ஒப்பீடு: சுயநிதி மெட்ரிக் 97.77%, அரசுப் பள்ளிகள் 86.87% - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday, 12 May 2017

பிளஸ் 2 தேர்ச்சி விகித ஒப்பீடு: சுயநிதி மெட்ரிக் 97.77%, அரசுப் பள்ளிகள் 86.87%

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகின. இதில் நிர்வாக ரீதியாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிக அளவில் இருக்கிறது. சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 97.77%, அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 86.87%.

2015-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 84% ஆக மட்டுமே இருந்தது. 2016-ம் ஆண்டு 85.71%. ஆக இருந்தது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.87% ஆக அதிகரித்துள்ளது.

ஓரியண்டல் பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 36 மாணவர்கள், 103 மாணவிகள் என மொத்தம் 139 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை:
நிர்வாகம்
தேர்ச்சி விகிதம்
ஆதிதிராவிடர் நல வாரியப் பள்ளிகள்
82.30%
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்
96.60%
கன்டோன்மெண்ட் வாரியப் பள்ளிகள்
96.23%
மாநகராட்சிப் பள்ளிகள்
90.06%
வனத்துறை கட்டுப்பாட்டுப் பள்ளிகள்
96.37%
அரசு உதவி பெறும் பள்ளிகள்
94.56%
அரசுப் பள்ளிகள்
86.87%
அறநிலையத்துறை பள்ளிகள்
91.58%
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்
92.53%
நகராட்சிப் பள்ளிகள்
87.20%
ஓரியண்டல் பள்ளி
100%
பகுதி உதவி பள்ளிகள்
95.62%
ரயில்வே பள்ளி
78.57%
சுயநிதி மெட்ரிக் பள்ளிகள்
97.77%
மாநில வாரியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுயநிதிப் பள்ளிகள்
97.76%
சமூக நலப் பள்ளிகள்
81.29%
பழங்குடியினர் நலப் பள்ளிகள்
86.65%
பகுதி மாநில பாடத்திட்ட பள்ளிகள்
97.22%

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot