அய்யா/ அம்மா வணக்கம்.
தனியார் பள்ளிகளைப் புற்றீசல் போல் அனுமதித்துவிட்டார்கள். கல்விக் கட்டண பெரும்பாலான குடும்பங்களை வறுமையின் பிடிக்குத் தள்ளுகிறது.
ஆங்கில வழிக் கல்வியே அறிவுக் கல்வி என்ற போலி நம்பிக்கையில் பலர் அறியாமைப் புதைகுழியில் சிக்கி தானும் அவதிப்படுவதோடு குழந்தைகளையும் அறிவுக் குருடாக்கி வருகிறார்கள். அய்யோ! நாட்டில் சமத்துவமில்லை.,சகோதரத்துவம் இல்லை, என்று துடிப்பவர்கள் கூட அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் இல்லை... கழிப்பறை இல்லை... என்று குறைசொல்லிவிட்டு தனியார் பள்ளிக்குப் போகும் நிலைதான் உள்ளது. ஊருக்குள் சமத்துவம் வேண்டும் என்று பேசுபவர்களே ஊர்ப்பள்ளிகளைத் தீண்டத்தகாத பள்ளிகளாகத் தான் பார்க்கின்றனர். ஏழைகள் இருக்கும் ஊரில் மட்டும் இனி அரசுப்பள்ளிகள் இருக்கும் நிலை வந்துவிட்டது. அரசுப்பள்ளிகளில் உள்ள குறைகளைக் களைய வழி தேடாமல், போராடாமல் இருக்கும் வரை இந்த அவலங்கள் தான் நீடிக்கும். கல்வி எளியவர்கள் ஏற்றம் பெறும் வழியாக இருக்கவேண்டும். ஆனால் கடந்த முப்பதாண்டு காலக் கல்விக் கொள்கைகள் எளியவர்களை ஏமாற்றும் வழியாக மாறிவிட்டது. ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் ஏழைக் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடிக்கிறார்கள்.
ஆனால் இவர்களில் ஆண்டுக்கு 30 பேர் கூட மருத்துவக் கல்விப்படிப்பில் சேர முடியவில்லை. நீட் தேர்வினால் மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்படுவார்கள் என்று இப்போது நாம் போராடி வருகிறோம். 1976 இல் பறிக்கப்பட்ட மாநில அரசுகளின் கல்வி உரிமை குறித்து இப்போது அதிகமாகப் பேசுகிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலப் பாடத்திட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்தவர்கள் மொத்தமாக ஏமாற்றப்பட்டார்கள் என்பதற்கெல்லாம் நாம் இத்தனை நாட்களாக வீதிக்கு வரவில்லை. அரசுப்பள்ளிகள் மீதும் அரசுப்பள்ளிகளில் படிப்போர் மீதும், படிக்கவைப்போர் மீது போலி அருளிறக்கம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை.
உண்மைகளை மக்களிடம் பேச எல்லோரும் வீதிக்கு வருவோம்...
வாருங்கள்.
அன்புடன்....
சு.மூர்த்தி,
ஒருங்கிணைப்பாளர்,
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
பேசி: 9965128135.

Government school la padicha thaan govt job innu sollunga appuram govt teachersa avanga pillaigalai govt school la thaan padikka vaikkanum nnu sonnal podhum entha sikkal illa
ReplyDeleteஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே.
ReplyDeleteஅது ஒன்றும் பொருள் கிடையாது.
ஒரு பொருளைக் கொண்டு கற்கும் போது தான்,
அதன் பராமரிப்புச் செலவு,
பாதுகாப்புச் செலவு, மற்றும் வளர்ச்சி செலவு என செலவு கணக்கு போட்டால் கூட ஏதாவது logic இருக்கு.
அதற்கு பதில்
பள்ளியின் ஆய்வுக் கூட பராமரிப்பு,
பள்ளியின் கட்ட டிட பராமரிப்பு,
தரமான உணவு,
தரமான குடிநீர்,
தரமான கழிப்பிட (வசதிகளை) தேவைகளைக் கொண்டு பள்ளிகளை உருவாக்கி அதற்கு கட்டணம் கேட்டால் கூட, ஆயிரக்கணக்கில் தனியார் பள்ளியில் கொட்ட தயாராக இருக்கும் அனைவரும் அரசு பள்ளியைத் தவிர வேறு ஏதுவும் வேண்டாம் என்ற நிலைக்கு வருவார்கள் (வருவோம்).
ஆங்கில வழிக் கல்விக்கு அரசு கட்டணம் வசூலிக்க உள்ளது.
ReplyDeleteஎன்னங்க சார் உங்க திட்டம்?????
Private school காரன் தான்
Tution fee, Captal fee, buildig fund , extra activity fee, book fee,d ress feeனு bi11 க்கு கணக்கே இல்லாம போட்டா இப்ப Government டே இந்த வேலைய பாக்க ரெடியாகி விட்டது.
நம்மால் தனியார் பள்ளியில் நடக்கும் கல்விக் கட்டணக் கொல்லையை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் இது வேறு.
சரிங்க நீங்க கட்டணம் கூட வசூலிச்சுக்கோங்க. ஆனா எந்த தனியார் பள்ளியும் இல்லாமல் , அனைத்தும் அரசு மட்டும் மே நடத்தக் கூடிய பள்ளியாக இருக்க வேண்டும். அது அனைவருக்கும்
சமமான கல்வி,
தாய்மொழி மற்றும் பிற மொழிக் கல்வி,
சமத்துவக் கல்வி,
வாழ்க்கைக்கான கல்வி,
மகிழ்ச்சி தரக்கூடிய கல்வி யாக இருந்து,
வருங்கால சந்ததியாவது பொய்யான வாக்குறுதியால் ஏமாற்றப்படாமல், நல்ல கல்வியை அரசாங்கத்தால் பெற்றால் நல்லது.