450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1.61 லட்சம் பேர் : வாரி வழங்கியது தேர்வு துறை. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 19 May 2017

450க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1.61 லட்சம் பேர் : வாரி வழங்கியது தேர்வு துறை.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்வுத் துறை மதிப்பெண்களை வாரி வழங்கியதால், ௧.௬௧ லட்சம் பேர், 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 லட்சத்து, 25 ஆயிரத்து, 909 பேர் தேர்வு எழுதியதில், 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம், 2016யை விட, 0.8 சதவீதம் அதிகம்; மாணவர்கள், 1.2 சதவீதமும், மாணவியர், 0.3 சதவீதமும், அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர். மாநிலத்தில் மொத்தமுள்ள, 12 ஆயிரத்து, 188 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில், 5,059 பள்ளிகளில், அனைத்து மாணவர்களும்தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த பள்ளிகளில் இது, 41.5 சதவீதம். மொத்தம், 57 ஆயிரத்து, 450 பேர் தேர்ச்சி பெறவில்லை.தேர்வில், 38 ஆயிரத்து, 613 பேர், 481க்கு மேலும், ஒரு லட்சத்து, 61 ஆயிரத்து, 370 பேர், 450க்கு மேல் கூடுதலாகவும் மதிப்பெண் பெற்றுஉள்ளனர். முந்தைய ஆண்டுகளில், 10ம் வகுப்பு தேர்வில், ஒரு லட்சம் பேர் வரை, 'சென்டம்' பெற்றனர். ஆயிரக்கணக்கானோர், 'டாப்பர்ஸ்' என்ற, மாநில, மாவட்ட அளவில், முதல் மூன்று பேர் பட்டியலில் இடம் பெற்றனர். இந்த ஆண்டும், 1.61 லட்சம் பேர், அதிகபட்ச மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களுக்கு, 'ரேங்கிங்' வைத்து, 'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிட்டிருந்தால், குறைந்தபட்சம், 10 ஆயிரம் பேர், 'ரேங்க்' பெற்றிருப்பர்.

 தமிழக பள்ளிக்கல்வி தேர்வுகளில், இப்படி அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பிளஸ் 2வுக்கு பின், மற்ற மாணவர்களுடன், உயர்கல்வியில் திணறும் நிலை உள்ளது. எனவே, பாடத்திட்டமாற்றத்துடன், தேர்வுத் துறையின் வினாத்தாள் தயாரிப்பு, திருத்த முறை, மதிப்பெண் வழங்கும் விதிகள், தரமான விடைக்குறிப்பு போன்றவற்றில், கூடுதல் கட்டுப்பாடுகளைகொண்டு வர வேண்டியகட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot