மருத்துவப் படிப்புக்காக, இம்மாதம் நடந்த, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வை, ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
வேறுபாடுகள் : திருச்சியை அடுத்த, தென்னுாரைச் சேர்ந்த, அபிஷேக் முகமது தாக்கல் செய்த மனு: மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல், நாடு முழுவதும் நடந்தது. மாணவர்கள், தங்கள் விருப்பப்படியான மொழியில் தேர்வு எழுதி கொள்ளலாம். அனைத்து மொழிகளிலும், கேள்வித்தாள் ஒரே மாதிரியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆங்கிலத்தில், நான் தேர்வு எழுதினேன்; சில மாணவர்கள், தமிழில் தேர்வு எழுதினர். ஆங்கிலத்தில் இருந்த கேள்விகள் மற்றும் தமிழில் இருந்த கேள்விகளை பார்க்கும் போது,
வேறுபாடுகள் இருந்தன. தமிழில் இருந்த கேள்விகள், எளிதாக இருந்தன.
உதாரணத்துக்கு, பஸ்சில் உள்ள இன்ஜின் செயல்பாடு பற்றி, ஆங்கிலத்தில் கேள்வி இருந்தது. ஆனால் தமிழில், பஸ்சில் எத்தனை சக்கரங்கள் உள்ளன என, கேட்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள், ஆங்கில மொழியில் மட்டுமே இருந்தன. ஆனால், தமிழில் இடம் பெற்றிருந்த கேள்விகள், ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாக இருந்தன.
அதே போல, ஆங்கில வழியாக எழுதிய என்னைப் போன்றவர்களுக்கும், மொழி பெயர்த்து, ஏன் வழங்கியிருக்கக் கூடாது.
விசாரணை
ஆந்திராவில், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வழங்கப்பட்ட கேள்விகள்
ஒன்றாக இருந்துள்ளன. அதே போன்று, தமிழகத்திலும் ஏன் பின்பற்றவில்லை; ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும், ஒரே மாதிரியாக கேள்விகள் இருந்துள்ளன.
குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில், ஆங்கில மொழியில் இடம் பெற்றிருந்த கேள்வி
களுக்கு, குஜராத்தி மற்றும் வங்காளத்தில், மொழி பெயர்க்கப்பட்ட கேள்விகளும் இடம் பெற்றன. ஆனால், தமிழகத்தில் அவ்வாறு இல்லை.
எனவே, 'நீட்' தேர்வு முறையை, ரத்து செய்ய வேண்டும். அனைத்து மொழிகளிலும், ஒரே மாதிரியான கேள்விகள் அடிப்படையில், 'நீட்' தேர்வை நடத்த வேண்டும். தேர்வு முடிவை, வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 24க்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:
Post a Comment