நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 24 May 2017

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் சிபிஎஸ்இ தலைவரும் மருத்துவக் கவுன்சில் தலைவரும் ஜூன் 7-ம் தேதிக்குள் இந்த வழக்கு குறித்து பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நீட் தேர்வை எழுதிய மாணவ மாணவிகள் தரப்பில் கடந்த வாரம் முதல் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு வந்தன.

இதில் மே மாதம் 7-ம் தேதி மருத்துவ பாடங்களுக்கான நீட் தேர்வை பல மொழி மாணவர்கள் எழுதினர். இதில் ஒரே மாதிரியான வினாத்தாளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படவில்லை, ஆங்கிலத்தில் இருந்த வினாத்தாளுக்கும் தமிழில் இருந்த வினாத்தாளுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இருந்தன. இதனால் இந்தத் தேர்வை செல்லாது என்று அறிவித்து, அதே சமயம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி முரளிதரன் மாணவ மாணவிகளின் மனுவை ஏற்று, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.

மேலும் இது குறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு சிபிஎஸ் இயக்குனருக்கும் மருத்துவ கவுன்சில் தலைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

1 comment:

  1. ST.XAVIER’S TRB ACADEMY:
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919
    PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :CHEMISTRY
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    * PG TRB :BOTANY
    TRB தேர்வு எழுதப்போகும் ஆசிரியர்களே…..!
    தேர்வில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்..........!
    கடந்த TRB-2015 தேர்வில் எமது மாணவிகள் RAJA KUMARI –ZOOLOGY மற்றும் MARY JAYANTHI- PHYSICS-ல் TAMIL NADU அளவில் முறையே 36-வது மற்றும் 17-வது இடத்திலும் கன்னியாகுமாரி மாவட்ட அளவில் இருவரும் முதல் இடத்திலும் வெற்றி பெற்று முதுகலை ஆசிரியராக பணி புரிகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot