அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை படியுங்கள்.!! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 20 May 2017

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை படியுங்கள்.!!

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...
முதலில் ஆசிரியர்களாகிய நம்மை தான் சீர்படுத்திக்கொள்ளவேண்டும் இதை படியுங்கள்.

ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு


நாளை சமுகத்தின்
இன்றைய சிற்பிகள் நாம்...
ஆண்டி முதல்
அரசியல்வாதி வரை...
ஆசிரியரால் உருவாக்கப்படுபவர்கள்...
இச்சமூகத்தில்
நல்ல மாற்றங்களை
நம்மால்
ஏற்படுத்த முடியும்...
என்று முதலில்
உங்கள் மீது நல்ல
நம்பிக்கை வையுங்கள்...

2. ஒற்றுமையே உயர்வு

ஊர்கூடி தேர் இழுப்பது போன்றுதான் - உங்கள்
செயல் என்றாலும்...
உங்கள் கருத்துக்களை
மற்றவர்களும் பின்பற்றவேண்டும் - என்று
உடனே உங்கள் கருத்துக்களை
அவர்களிடம் திணிக்காதீர் - இது
உங்கள் நண்பர்களையும்
பகைவர்கள் ஆக்கும்
உறவினராயினும் பின்
உறவ கசக்கும்...

3. முதல் பயணம்...

அப்படி என்றால் தனி ஒரு நபராய்
நான் மட்டும் எப்படி? - என்ற கேள்வி
உங்களை பின்னுக்கு இழுக்கும்..
புறம்தள்ளுங்கள் அதை முதலில்
பின் உங்கள் தன்னம்பிக்கையை மட்டும்
துணைக்கு அழைத்துக்கொண்டு பயணியுங்கள்
உங்கள் காலின் நடைபாதைக்கு மட்டும் வெளிச்சம் கிட்டும்...
அது வேறுஎதுவும் அல்ல
உங்கள் தன்னம்பிக்கை

4. விளக்கு எரிய...

நல்ல மாற்றங்கள்
நம்மிடம் இருந்து பிறக்கப்போகிறது - என்று
உங்களை நீங்களே அவ்வப்பொழுது
பாரட்டிக்கொள்ளுங்கள்
இந்த சுயபாரட்டு - நம்மை
எத்தனை இடர்பாடுகள் வந்தாலும்
சோர்வடையசெய்யாது...
இது உங்கள் தன்னம்பிக்கை விளக்கிற்கு
வார்க்கும் எண்ணெய்...

5. தடை ஓட்டப் பயணம்..

உங்கள் நெடும்பயணத்தில்
கேலிகள் வேலிபோடும்
இலக்கை அடைவதுதான் நம் நோக்கம்
வேலியை உடைப்பது நம் இலக்கல்ல
கோபம் கொண்டு உடைக்க முற்படாதீர்...
அதில் நம் சக்தியை விறையமாக்க வேண்டாம்
புத்திசாலியாய் தாண்டி செல்லுங்கள்...

6. கழி கிடைக்கும் கண்டிப்பாய்...

உங்கள் விடாமுயற்சிக்கும்
தன்னம்பிக்கைக்கும் சிறிய பரிசு காத்திருக்கும்
அந்த இருட்டு பயனத்தில்
இன்னொரு ஓளி
ஆம் உங்களை போன்றே
உங்கள் முன்னோ பின்னோ
ஒருவர் வந்து கொண்டிருப்பார் - அல்லது
சென்றுகொண்டிருப்பார்...
உங்கள் பயணப்புகழ் பகிராதீர்..
அவரைப்பார்த்து புன்னகை மட்டும் சிந்துங்கள்...
நீங்கள் விழும் நேரத்தில் கழியாய் இருப்பார்...

7. தோள் கொடுத்து தொடருங்கள்

இரண்டு கால்களின் பயணம் நான்காகும்
இரண்டு விளக்குகளின் வெளிச்சம்
உங்கள் பாதையை இன்னும் தெளிவாக்கும்
தோள் கொடுத்து தொடருங்கள்
தோல்வி பயம் பட்டுபோகும்
தற்போது மெல்ல வெற்றி
வெளிச்சம் போட்டுக்காட்டும்
உங்களின் பயணப்பாதையை...

8.உங்கள் வெற்றி இதுவல்ல

இது உங்களின் வெற்றியல்ல
உங்கள் தன்னம்பிக்கயின் வெற்றி
அதிராமல் ஆரவாரமில்லாமல் அமைதியாய்
நீங்கள் வந்த பாதையை
சற்று திரும்பி பாருங்கள்
ஒரு கூட்டமே
ஒளிப்பிழம்பாய் வந்துகொண்டிருக்கும்
இதுதான் உங்களின் வெற்றி...

- இது ஓர் ஆசிரியரின் பயணக்குறிப்பு

அரசு பள்ளியில் மாணவர்சேர்க்கையை அதிகரிக்க...

1. தற்பொழுது இருக்கும் மாணவர்களை தமிழ், ஆங்கில வாசிப்புதிறனில் சீர்படுத்துங்கள்.

2. மாணவர்கள் தங்கள் முந்திய வகுப்பு வரை எதுவும் தெரிந்துகொண்டு வருவதில்லை என்று குறைகூறாமல் உங்கள் திறமைக்கு அளிக்கப்பட்ட சவாலாய் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள்...

3. எழுத்தே கூட தெரியாமல் இருப்பார்கள் அவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அட்டைதாளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் கொண்டு தினமும் வாய்விட்டு படிக்கசொல்லி பயிற்சி கொடுங்கள்..

4. தினமும் க - வரிசை ங - வரிசை என்று ஒவ்வொரு வரிசையாய்
பழைய தமிழ் செய்திதாள்களை கொடுத்து எழுத்துக்களை வட்டமிட்டு வரச்செய்யுங்கள் இப்பயிற்சி எழுதுக்களின் உருவங்களை அவர்கள் மனதில் நிலைநிறுத்த பயன்படும்.

5. ஒரு சொல்வார்த்தை இரு சொல்வார்த்தை என தினமும் 10 வார்த்தைகள் (சொல்வதை எழுதுதல்) டிக்டேஷன் வைத்து பளு இல்லாமல் வலு சேருங்கள்

6. வாசிப்பில் எழுத்துக்களின் சேர்ப்பை தெளிவான ஒலிநடையுடன் மெதுவாய் கற்பித்து அவர்களின் வாசிப்பிற்கு கருகொடுங்கள்...

7. கருவை வலுப்படுத்த தினமும் நீங்கள் வாசித்து அவர்களையும் வாசிக்கவைத்து ஒழுங்குபடுத்தி வாசிக்க செய்து பயிற்சி கொடுங்கள்...

8. தொலைக்காட்சி செய்திவாசிப்பை மாணவர்களிடம் இதுதான் வாசிப்பு என்று உதாரணப்படுத்துங்கள்.

9. அதுபோன்று வாசிக்கும் மாணவர்களுக்கு மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவர்களை முன்னிலைப்படுத்தி பாராட்டுகளை பெற்றுக்கொடுங்கள்..

10. பரிசுகளை வழங்குங்கள்.

விதை முளைவிட்டு, துளிர்விட்டு, இலைவிட்டு, நோய்பட்டோ, மீண்டும்துளிர்விட்டோ, இலைவிட்டு, கிளைபடர்ந்து, மலர்மலர்ந்து, காய்விட்டே கனியாகிறது...

இதே போல தான் மாணவர்கள் உங்களுக்கு எந்தநிலையிலும் எந்தகலவையிலும் உங்கள் வகுப்பிற்குள் வந்து சேர்வார்கள்...
விரக்தியும், விதண்டாவாதத்தையும் விட்டுவிட்டு...
நீர் ஊற்றுவதும், உரமிடுவதும், நோய்வராமல் பாதுகாப்பதும் நம்கடமை என்று எண்ணி பயணத்தை துவக்குங்கள்...

நம் முதல் பயணம் வெற்றிபெற நம்மை நாமே வாழ்த்திக்கொண்டு புறப்படுவோம்..

4 comments:

  1. Arasu thurai serntha anaivarmay thangal pilaigalai arasu paliil serthalay pothum mansvar serkai athikarikum..

    ReplyDelete
  2. Arasu thurai serntha anaivarmay thangal pilaigalai arasu paliil serthalay pothum mansvar serkai athikarikum..

    ReplyDelete
  3. நன்றி எனது எழுத்துக்களை உங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு....
    https://m.facebook.com/story.php?story_fbid=1621304724805736&id=100007786717035

    ReplyDelete
  4. நன்றி எனது எழுத்துக்களை உங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு....
    https://m.facebook.com/story.php?story_fbid=1621304724805736&id=100007786717035

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot