ஆங்கில வழி கல்வி தொடரும்: பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 10 May 2017

ஆங்கில வழி கல்வி தொடரும்: பள்ளிக்கல்வி அதிகாரிகள் விளக்கம்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடர்ந்து நடை பெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளை தொடங்க சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஏராளமான அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக் கல்வி இல்லை எனக் கூறி, சில ஆசிரியர் சங்கங்களின் வாட்ஸ் அப் குழுக்களில் வேகமாக தகவல் பரவியது. இதனால் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் இருக்குமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது.

இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் வழக்கம்போல் தொடரும். பெற்றோர்கள் விரும்பும் பயிற்று மொழியில் மாணவர்களைச் சேர்க்கலாம். அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதே அரசின் பிரதான நோக்கம்” என்று தெரிவித்தனர்.

5 comments:

  1. Start computer class so that student count will be increased

    ReplyDelete
    Replies
    1. அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வியை அறிமுகம் செய்தால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்

      Delete
  2. முற்றிலும் உண்மை அரசு | அரசு உதவிபெறும் பள்ளிகளில் தேவையா அடிப்படை கட்டிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதியுடன் சேர்த்து ,
    தற்கால நடைமுறைக்கு மிகவும் தேவையான கணினி பாடத்திட்டத்துடன், சிறந்த பராமரிப்பு கண்கானிப்புடன் கூடிய திட்டம் அமுல்படுத்தினால் மாணவர்களுக்கு நல்லது.

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot