தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கடுமையான கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பினைத் தள்ளி வைக்க வேண்டும். ஒன்றிய அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வண்ணமயமான வகுப்பறைகளை உருவாக்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்ட பள்ளி களுக்கு புதிய ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தி பணி நியமனம் செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
2016-17-ம் கல்வி ஆண்டில் பணி நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் சென்ற ஆசிரியர்களை அதே ஒன்றியத்தில் பணி மாறுதல் வழங்கப்பட வேண்டும்.ஆசிரியர்களை கற்பித்தல் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்து வதைத் தவிர்க்க வேண்டும். உள் ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment