அறிவிப்போடு முடங்கி போன அரசு சித்த மருத்துவ பல்கலை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 17 May 2017

அறிவிப்போடு முடங்கி போன அரசு சித்த மருத்துவ பல்கலை

திருநெல்வேலியில், சித்த மருத்துவ பல்கலை அமைக்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும், பணிகளை துவக்காமல், அரசு கிடப்பில் போட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மையப்பகுதியில், 3 ஏக்கரில், அரசு சித்த மருத்துவக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. 'இந்த கல்லுாரி, சித்த மருத்துவ பல்கலையாக தரம் உயர்த்தப்படும்' என, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், இதற்காக, ௮ கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. பல்கலை அமைக்க போதிய இடம் இல்லாததால், பணிகள் முடங்கின. கல்லுாரி மற்றும் பல்கலைக்கு, இடம் ஒதுக்கக் கோரி, மாணவர்கள், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பாளையங்கோட்டை அருகில் உள்ள, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு சொந்தமான, 167 ஏக்கர் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஓராண்டுக்கு மேலாகியும், அதற்கான பணிகள், இன்று வரை துவக்கப்படாமல் உள்ளன. 'தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி, சித்த மருத்துவப் பல்கலையை, தாமதமின்றி அமைக்க வேண்டும்' என, திருநெல்வேலி சித்த மருத்துவப் பல்கலைக்கான மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். தமிழக முதல்வருக்கும், மனுக்களை அனுப்பி உள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot