மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு பள்ளி நிர்வாகங்களுக்கு உரிமை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 23 May 2017

மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு பள்ளி நிர்வாகங்களுக்கு உரிமை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு.

மாணவர்கள் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும்போது மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க மறுப்பதற்கு எந்த பள்ளிகளுக்கும் உரிமை இல்லை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கும்பகோணம் வலையபேட்டையைச் சேர்ந்தவர் நிம்மதி. இவரது மகன்கள் குடியரசு, இயற்கை ஆகியோர் வலைய பேட்டையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் பயில்கின்றனர். அவர்களுடைய பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பள்ளி நிர்வாகம் தர மறுத்ததால் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மனு தாரரின் கோரிக்கை தொடர்பாக சென்னை சிபிஎஸ்இ மண்டல அலுவலர் மூலம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி பிரச்சினையைத் தீர்க்கநடவடிக்கை எடுக் கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதிபதி கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதவி சொலிசிட்டர் ஜெனரல்ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை இ.மெயில் மற்றும் தொலை பேசி மூலம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவிக்கு மாறு சிபிஎஸ்இ மண்டல அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்த ரவு பள்ளி நிர்வாகத்துக்கு தெரியப்படுத் தப்பட்டதா என்பது தொடர்பாக சிபிஎஸ்இ மண்டல அலுவலரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றார்.பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மாணவர்கள் ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாறும்போது மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க மறுப்ப தற்கு எந்த பள்ளிகளுக்கும் உரிமை இல்லை.இந்த வழக்கில் சிபிஎஸ்இ மண்டல அலுவலரின் நடவடிக்கை பொறுப்பற்றது.

இந்த மனுவுக்கு தீர்வு ஏற்படுத்தும் நோக் கத்தில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய தால் கோபமுற்று அனைத்து வழக்கறி ஞர்களும் குற்றவாளிகள் என பள்ளித் தலை வர் பேசியிருப்பது அவரது பொறுப்பற்ற தன்மையையும், கொடூரமான மனநிலையை யும் காட்டுகிறது. மனுதாரரின் மகன்களின் பள்ளி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், நடத்தைச் சான்றிதழ் மற்றும் பிற அசல் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும்.

இந்த உத்த ரவை நிறைவேற்றாமல் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கையால் மனுதாரர் தனது மகன் களை வேறு பள்ளியில் சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் மனுதாரரின் மகன்களை பள்ளி நிர்வாகம் அடுத்த கல்வியாண்டிலும் தங்களது பள்ளியில் சேர்த்து கல்விக் கட்டணம் வசூலிக்காமல் கல்வி கற்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot