தமிழகம் முழுவதும் அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு சிப்ஏடிஎம் கார்டு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 16 May 2017

தமிழகம் முழுவதும் அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு சிப்ஏடிஎம் கார்டு

தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள ஒரு கோடி பேருக்கு புதிய சிப் பொருத்திய ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட உள்ளதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஞ்சலக சேவை


இந்தியா முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரம் அஞ்சலகங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என நான்கு மண்டலங்கள் உள்ளது. இவற்றில் 94 தலைமை அஞ்சலகங்கள் உட்பட மொத்தம் 12 ஆயிரத்து 185 அஞ்சலகங்கள் இயங்கி வருகின்றன. அஞ்சலகத்தில் தபால் மற்றும் பார்சல் சேவையுடன் வங்கி சேவைகளும், ஏ.டி.எம். வசதி, பாஸ்போர்ட்டு பெறும் வசதி என தொடங்கப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்கு

அஞ்சல் துறையில் ரூ.50 இருப்புத்தொகையில் சேமிப்பு கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்., மையத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்; சர்வீஸ் சார்ஜ் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டினர்.

ரூபே ஏடிஎம் கார்டு

வேலுார் மாவட்டத்தில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானவாடிக்கையாளர்கள் உள்ளனர். அதே போல தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில், 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இவர்களுக்கு ரூபே ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட்டது.

புதிய எலெக்ட்ரானிக் சிப்-கார்டு

இந்த கார்டுகளை வாடிக்கையாளர்கள் ரெடிமேட் ஷோரூம்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்கு ஏற்றாற் போல் புதிய எலெக்ட்ரானிக் சிப் பொருத்திய ஏ.டி.எம்., கார்டுகள் வழங்கப்பட இருக்கின்றன. அதை அனைத்து பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot