'NEET'' தேர்வால் தமிழக மாணவர்களுக்கு 'ஜாக்பாட்': கூடுதல் இடங்கள் கிடைக்கும் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 10 May 2017

'NEET'' தேர்வால் தமிழக மாணவர்களுக்கு 'ஜாக்பாட்': கூடுதல் இடங்கள் கிடைக்கும்

மத்திய அரசு நடத்தியுள்ள, 'நீட்' தேர்வால், தமிழக மாணவர்கள் அதிக அளவில் மருத்து வக் கல்லுாரிகளில் சேர வாய்ப்பு உருவாகி உள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர, இந்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. தமிழக மாணவர்களுக்கு, இத்தேர்வில் விலக்கு கேட்டு, சட்டசபையில், மசோதா நிறைவேற்றப் பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களிலும், மே 7ல், 'நீட்' தேர்வு நடந்தது. உச்ச நீதிமன்றம், 2015ல் வழங்கிய வழிகாட்டுதல்படி, தேர்வை நடத்தி முடித்ததாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

வாய்ப்பு :

அதேநேரத்தில், 'நீட்' தேர்வால், தமிழக மாண வர்களுக்கு, மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதல் இடம்கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
இதுவரை, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை இணைப்பில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரி களில், 85 சதவீத இடங்களிலும்; தனியார் கல்லுாரிகளில், 50முதல், 60 சதவீத இடங்களிலும் மட்டுமே, தமிழக மாணவர்கள் கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கப்பட்டனர்.

அரசு கல்லுாரிகளில், மீதமுள்ள, 15 சதவீத இடங் கள், அகில இந்திய அளவில் நடந்த, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே ஒதுக்கப்பட்டன.
முந்தைய ஆண்டுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் பேர், 'நீட்' தேர்வை எழுதாததால், மற்ற மாநில மாணவர்களே,இந்த, 15 சதவீத இடங்களில் சேர்ந்தனர்.

மத்திய அரசு ஒதுக்கீடு :

இந்த ஆண்டு, தமிழக மாணவர்கள் அதிகம் பேர், 'நீட்' தேர்வை எழுதி உள்ளனர். இதில், தேர்ச்சி
அத்துடன், 'நீட்' தேர்வு எழுதிய தமிழக மாண வர்கள், நாட்டின் எந்த தனியார் மருத்துவக் கல்லுாரி மற்றும் பல்கலையிலும் சேரலாம். அதேபோல், கூடுதல் மதிப்பெண் பெற்றால், மற்ற மாநில அரசு கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், கூடுதல் இடங்கள் பெற முடியும். 

5 comments:

  1. Sir, மனசாட்சியுடன் யோசிச்சா
    எப்படி இது சரியா வரும் இன்றைய சூழலில்
    அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு மட்டும் எட்டாத நிலையில் உள்ள மருத்துவ படிப்பு, இன்று மெட்ரிக்கில் படிக்கும் நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கும் இப்போது எட்டாத நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளது.
    இந்நிலை மாற வேண்டும் எனில்
    முதலில் அனைவருக்கும்
    சமமான கல்வி ;
    தாய்மொழிக் கல்வி,
    வாழ்க்கைக்கான கல்வி,
    மகிழ்ச்சி தரக்கூடிய கல்வி, மற்றும் தேவையான உட்கட்டமைப்புடைய (மைதானம், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி மற்றும் முடிந்தால் சுகாதாரமான ம திய உணவு) பள்ளிகளை உருவாக்கி விட்டு ,சமமான பாடத்திட்டத்தில் படிக்க வைத்துவிட்டு சமமாக தேர்வை வைத்து திறமையான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நீட் தேர்வை தாராளமாக நடத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. adhuku oru 10 varusam agum paravalya..... CBSE namma pasanga mana padam pandranga but other state la only attitude and iq than....

      Delete
  2. காமெடி பண்ணாதீங்க....

    ReplyDelete
  3. This is very true. Our students can compete with other states students for 15 % seats available in all states across India. This is in addition to seats (85%)in Tamilnadu.Very good opening for our talented students.

    ReplyDelete
  4. கண்டிப்பாக முடியும் .
    கல்வி ,கல்வி நிறுவனம் , மற்றும் அரசு பணி ஊழியரின் பதவி , என இவை அனைத்தையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் ( அதாவது கல்லூரி போன்று அனுபவம் யுள்ள NCERT இன் கீழ் ) வர வேண்டும் .மாநில அரசோ அல்லது தனியார் நிறுவனமோ இதற்கு பொருந்தும் . அப்போது தான் நிறுவனத்தின் வடிவமைப்பு ,அளவு , கழிப்பிட வசதி , குடி நீர் வசதி , விளையாட்டு மைதான இடத்தின் அமைப்பு , பாட வடிவமைப்பு , எக்ஸாம் , ஆசிரியர் தகுதி , ஆசிரியர் அளவு , என மாற்றம் வரும் .

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot