எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியார் பள்ளிகளில் அரசின் செலவில் படிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், ஐந்து வயது முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு, கட்டணமின்றி சேர்க்கப்படுவர். அதற்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசிடம் பெற்று, மாநில அரசு வழங்கும். தமிழகத்தில், எல்.கே.ஜி., என்ற பள்ளி நுழைவு வகுப்பில், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும், 10 ஆயிரம்பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள், இந்த திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.
கட்டாய கல்வி சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் சேரும் மாணவர்களுக்கு, 8ம் வகுப்பு வரை, எந்தவித கட்டணமும் கிடையாது. இந்த சிறப்பு சலுகையில், பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தினரின் குழந்தைகளை சேர்க்கலாம்.இந்த ஆண்டு, இலவச சேர்க்கை திட்டம், 'ஆன்லைனில்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்., 20ல், விண்ணப்ப பதிவு துவங்கியது; இதுவரை, 25 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 18ம் தேதி, விண்ணப்ப பதிவு முடியும் நிலையில், இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.
ஆனால், ஒரு லட்சம் இடங்களுக்கு, இன்னும் விண்ணப்பங்கள் வரவில்லை. எனவே, இந்த வாய்ப்பை, பெற்றோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கல்வித்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

Entha websitla poi apply pannanum sir.ilavasa kattaya kalvi pera
ReplyDeletewww.bge.tn.gov.in
DeleteSir CBSE schoolkum porunthuma
ReplyDeleteSir online la mattum apply panna podhuma? Athulafirst column enrollment. Numbernu keatkrangalea athu endha num sir.
ReplyDelete