UNITED KINGDOM (இங்கிலாந்து ) லண்டன் நாளிதழில்தமிழகத்தின் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி வண்ணப்படத்துடன் வெளியாகி உள்ளது.
லண்டனிருந்து வெளியாகும்
சஞ்சிகை Confluence. தெற்காசியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்.
மே
மாத இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியைப் பற்றி
ஒரு முழுப்பக்கக் கட்டுரை வண்ண படங்களுடன் வெளியாகியிருக்கிறது. எழுதியிருப்பவர்:
சீனிவாச சௌந்தரராஜன் (இன்னம்பூரான்) (86).இந்திய அரசின் உதவி தலைமைக் கணக்கு
தணிக்கையாளராகவும் (ஓய்வு ) மற்றும் இங்கிலாந்து நாட்டில் மக்கள் ஆலோசனை
மன்றத்தில் ஆலோசகராகவும் சில வருடங்கள் பணியாற்றி உள்ள இன்னம்பூரான்
என்கிற சௌந்தரராஜன் (வயது 86),தமிழறிஞரும் கூட.
சமீபத்தில் பள்ளிக்கு வருகை தந்திருந்தார். மாணவர்களிடம் நான்கு மணி நேரம்
செலவிட்டார்.
அந்த அனுபவத்தை இந்தக் கட்டுரையில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார்.
THE SCHOOL & THE SEAGULL என்கிற தலைப்பில்
நமது பள்ளியும் தொலை நோக்கும்
சமீபத்தில் 79 தாவது கம்பன் விழாவிற்காக நான் காரைக்குடி சென்று
இருந்தேன்.கம்ப ராமாயணம் என்கிற பாத்திரத்தை படைத்தவர் கம்பர்.எனது அன்னை
தனது சுய சரிதத்தில் குறிப்பிட்டிருந்த நல்ல உள்ளங்களின் வாரிசுகளையும்
தேடி சென்றேன்.என்னுடைய அம்மா பிறந்தது காரைக்குடி.நானும் அங்குதான்
பிறந்தேன்.தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் ஜெர்மனி முனைவர். சுபாஷினி என்னை
தொடர்பு கொண்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு
சென்று அந்த மாணவர்களுடன் நல்லெண்ண முறையில் நேரத்தை செலவிடலாம் என்று
அன்பு கட்டளையிட்டார்.என் வாழ்க்கையில் அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
சமுதாயத்தின் ஓரம் கட்டப்பட்ட
தினக்கூலிகளின் குழந்தைகள்தான் அங்கு படிக்கிறார்கள்.அந்த பள்ளி கூடத்தின்
பின்னணி குறிப்பிடத்தக்கது.86 வயது உள்ள தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன்
செட்டியார் இந்த பள்ளி கூடத்தில்தான் தான் படித்ததாக தெரிவித்தார்.அந்த
பள்ளிக்கூடம் தற்காலத்தில் மிகவும் அடிமட்டத்தில் உள்ள பிள்ளைகளுக்கு
கல்வியில் உதவியாக இருப்பது நியமானதுதான்.இந்த பள்ளிக்கூடம் இது சாதாரணம்
என்று கருதப்பட்டாலும் மிகவும் வலிமைகளை தரும் இந்த பள்ளிக்கூடம் பல புதிய
உத்திகளை கையாண்டு வருகிறது.அன்றைய தினம் நிகழ்வுகள் சீட்டு கட்டு போல்
ஒன்றன் பின் ஒன்றாக வந்தன.வழிபாட்டு கூட்டம் ராணுவ கட்டுப்பாட்டுடன்
நடந்தது.வழக்கமாக மாணவரோ அல்லது மாணவியோதான் இந்த பள்ளியில் தேசிய
கொடியினை ஏற்றுவார்கள்.அன்றைய தினம் அந்த பெருமிதத்தை ஒரு பொருத்தமான
முறையில் கொடுத்தார்கள்.ஒரு 10 வயது பெண் நடந்த நிகழ்வுகளை படைத்தளபதியினை
போன்று நடத்தி காண்பித்தார்.எல்லோரும் நின்று கொடியினை வணங்கி கொடி உறுதி
மொழி எடுத்துக்கொண்டு ஒரு ஒருமைப்பட்ட நிகழ்வாக அமைந்தது.அவளுடைய அன்பு
கட்டளையின் மீது ஒரு மாணவி அன்றைய செய்திகளை தமிழில் வாசித்தார்.
மற்றொருவர் ஆங்கிலத்தில் வாசித்தார்.பிறகு விஞ்ஞானத்தில் ஒரு முன்னேற்றத்தை
பற்றி ஒரு அறிவிப்பு சொல்லப்பட்டது.பிறகு எனக்கு மிகவும் மகழ்ச்சி கொடுத்த
நிகழ்வு என்னவெனில் சிந்தனைகளம் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக
ஒரு மாணவர் சில வரிகள் பேசினார்.அதற்கு பிறகு மாணவ,மாணவிகள் பள்ளி அறையில்
நான் முன் நின்று நடத்த வேண்டிய நிகழ்வுக்கு ஒரு அறைக்கு சென்றனர்.அதற்கு
பதிலாக என்னை அவர்கள் வழி நடத்தி சென்றனர்.அந்த பள்ளி கூடத்தில் உள்ள
சுகாதாரத்தை கண்டு பிரதமர் மோடி அவர்கள் சந்தோசப்பட்டு இருப்பார் .பிரதமர்
மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் இந்த பள்ளியில் தமிழக அரசு
வழங்கும் மதிய உணவு சத்துணவு பரிமாறுவதில் நான் கண்டேன்.பிரதமர் மோடி
இதனை நேரில் கண்டால் மகிழ்ச்சி அடைவார் .ஒவ்வொரு மாணவரும் தூய்மையான
கைகுட்டையின் மேல் சுத்தமான சாப்பாட்டு தட்டை வைத்து சிந்தாமல்,அமைதியான
முறையில் உணவு அருந்தினார்கள்.எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 1ம்
வகுப்பு,இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை அருகில் அமரவைத்து அன்புடன்
அவர்களுக்கு ஊட்டி அனைவரையும் சாப்பிட வைத்தனர்.ஒவ்வொரு மாணவரும் சாப்பிட்ட
பின்பு தாங்கள் தட்டில் உள்ள அனைத்தையும் சாப்பிட்டு முடித்து விட்டோம்
என்று அங்கு பணியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி
ஆசிரியர்களிடம் காண்பித்து சென்றனர்.இது எனக்கு புதிய அனுபவமாக
இருந்தது.மகிழ்ச்சியாக இருந்தது.ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு நாள்களில்
இரண்டு
பெற்றோர்களை வரவழைத்து சத்துணவு சாப்பிட செய்து தரத்தினை பள்ளியில் உள்ள
சத்துணவு பதிவேட்டில் தங்களது கருத்துக்களை பதிவிடுகிறார்கள் . நான்
பள்ளிக்கு சென்ற நாளும் பெற்றோர்கள் வந்து உணவை சாப்பிட்ட தங்கள்
கருத்துக்களை என் முன்பாக பதிவு செய்தனர்.
எனக்கு ஒரு பெரிய விருந்து அளிக்கப்பட்டது.எப்படி என்றால் ஒவ்வொரு
மாணவரும் தன்னுடைய ஆற்றல்களை பற்றி ,தனக்கு கிடைத்த விருதுகளை பற்றி
மிகவும் அடக்கத்துடன் விளக்கினார்கள் .பல மாணவர்களுக்கு சுமார் 15
சான்றிதழ்கள் இருந்தன.தனலெட்சுமி என்ற மாணவிக்கு சுமார் 46 சான்றிதகள்
இருந்தன.அவரது பெற்றோர்கள் தினக்கூலிகள்.எனக்கு ஒரு கருத்து தோன்றியது,
வாழ்வியல் சிக்கல்கள் தொடர்பாக பெற்றோர்களுக்கும் சொல்லி கொடுப்பதை இந்த
பள்ளியில் கண்டேன்.அதனால்தான் என்றோ ஒரு நாள் வொர்ட்ஸ் வொர்த் (
WORDSWORTH) 1802ஆம் ஆண்டில் "The Child is Father of the Man".என்று
சொன்னது தமிழில் சொல்ல போனால் "முருக பெருமான் தகப்பன் சாமீ ஆன கதையாக"
இந்த பள்ளியில் நடக்கிறது.
நாங்கள் ஒரு கேள்வி பதில் நிகழ்வுதான்
நடத்துவதாக முடிவு செய்து கொண்டோம்.சுமார் 4 மணி நேரம்
மாணவர்களும்,மாணவிகளும் கேள்வி மழையாக பொழிந்து எனக்கு மிகவும் மகிச்சி
கொடுத்தார்கள்.நான் முன்னால் குறிப்பு எடுப்பது பற்றி சொல்லி
இருந்தேன்.பிறகு முதல் நாள் பாடத்தையும் ,மறு நாள் பாடத்துடன் அசை
போடுவதுடன் ,அன்றைய பாடத்தை தரம் பிரித்து படிப்பதையும், வரலாறு படத்தின்
ஒரு முன்னோட்டோம் கொடுத்து படிப்பது தொடர்பான அவசியத்தையும் சொன்னேன்.அந்த
மாதிரி படித்தால் பரீட்சைக்காக லொட.லொட என்று படிக்க வேண்டிய தேவை இல்லை
என்று சொன்னேன்.படிப்பில் முக்கியத்துவத்தை பற்றி நாங்கள் மிகவும்
சுவையுடன் அலசினோம்..படிப்பு தொடர்பாக பேசும்போது ஓதாமல் ஒரு நாளும் இருக்க
வேண்டாம் என்று சொன்னார்கள்.படிப்பு முடிவதற்கு மரணம் தான் காரணமாக இருக்க
கூடும் என்று சொன்னேன்.எந்த அளவிற்கு அதனை பின்பற்றுகிறீர்கள் என்று
கேட்டார்கள்.நான்கு ஆண்டுகளுக்கு ஒரே பக்கத்தில் நாள் குறிப்பு எழுதி
வைப்பதை நேரடியாக காட்டினேன். அந்த மாதிரி இரண்டு டைரி இருந்தால் எட்டு
வருடத்தில் அறிவு வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நேரடியாக நீங்களே
பார்க்கலாம் என்று சொன்னேன்.எல்லா மாணவர்களும் இதனை வரவேற்றார்கள்.அந்த
பள்ளிகூடத்தின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் , நான் ஒரு மேற்கோள் கொடுத்து
ஒரு பக்கத்திற்கு குறிப்பு கொடுப்பது வழக்கம்.அதே மாதிரி தங்கள்
பள்ளிக்கும் அனுப்பமாறு கேட்டு கொண்டார்.எப்போது பார்த்தாலும் புதிய,புதிய
சிந்தனைகளுடன் அவரது நினைவலைகள் அமைகின்றன.
வினா விடை நிறைவில் சில உதாரணங்கள்
நான்
முக்கியமாக எடுத்த முடிவுகள் பற்றி பரமேஸ்வரி என்கிற மாணவி கேட்டார்.நான்
இந்திய நாட்டின் தணிக்கை துறையை ஏன் தேந்தெடுத்தேன் என்று விளக்கினேன்
.அதில் எனக்கு நல்ல சுதந்திரம் இருக்கிறது.நமது இந்திய அரசியல் சாசனமே
எங்களுக்கு அந்த துறையில் பூரண சுதந்திரம் கொடுக்கிறது என்பதால் நான் அதனை
தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னேன்.மற்றொரு முக்கியமான தீர்மானம் , நான்
இந்தியாவிற்கு வந்தது பற்றி.இங்கிலாந்தில் நிரந்தரமாக தங்கி விட்ட நான்
தமிழ் இலக்கியத்தையும்,இலக்கணத்தையும் உயர்ந்த கல்வி முறையில் நான் கற்று
கொள்ள வேண்டும் என்கிற தீர்மானத்தின் அடைப்படையில் இந்தியாவிற்கு
திரும்பியதற்கு அத்தகைய காரணம் என்று சொன்னேன். ( நான்கு மணி நேரத்தில்
நடந்தவற்றை நான்கு வரிகளில் தான் சொல்லப்படுகிறது.ஏதோ சிலவற்றை மட்டும்தான்
இங்கு சொல்ல முடிகிறது.அனைத்து கேள்விகளும் பொதுவாக அமைந்தன.ஜெகதீஸ்வரன்
என்ற மாணவன்,நான் இரண்டு அரசியல் தலைவர்களை மிகவும் மதிப்பதாக சொன்னேன்.அது
யார் என்றும்,ஏன் நீங்கள் அவர்களை மதிக்கீறீர்கள் என்றும்,அது
தொடர்பாகவும் விளக்குமாறும் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் என்னிடம்
கேட்டார்.தேர்தலுக்கு சென்ற செலவை அரசு செலவாக காட்டியதை தவறு என்று
நாங்கள் கூறியதை நேரு அவர்கள் சரியாக புரிந்து கொண்டு தன் கையில் இருந்து
அந்த பணத்தை கொடுத்தார்.அது மட்டுமில்லாமல் எப்போதும் விழிப்புடன்
இருக்கும் கணக்கு தலைமை அதிகாரியை பாராட்டினார்.தற்காலம் நடக்கும்
விஷயங்களை பற்றி நாங்கள் சிரித்து கொண்டோம்.மற்றொருவர் 1966இல் குஜராத்
மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஹிதேந்திரபாய் தேசாய் என்பவர்
ஆவார்.அவரது ஆட்சி காலத்தில் நான் குஜராத்தில் நிதி ஆலோசகர் .அவர் எனக்கு
கொடுத்த ஆலோசனை .நான் சரி என்று கோப்புகளில் கை எழுத்திட்டால் அவர் எந்த
கேள்வியும் இல்லாமல் கை எழுத்து இடுவார் . கோப்புகளில் சிலவற்றில்
கூறியவற்றை சரி இல்லை என்று நிராகரித்து விட்டால் அதற்கு நான் காரணம் கூற
வேண்டும்.மாற்று வழி சொல்ல வேண்டும்.என்று சொன்னார்.அந்த அறிவுரை எனக்கு
என்னுடைய வேலைக்கு வாழ்நாள் முழுவதும் ஒளி விளக்காக அமைந்தது.இங்கிலாந்தில்
முனிசிபல் நூலகங்களில் என்னை தமிழில் வரவேற்றார்கள்.பல மொழிகளில்
வரவேற்பது அவர்கள் வழக்கம்.இதை பின்பற்றி மொழிகளை கற்று கொள்வதை பற்றி ஒரு
நீண்ட பட்டிமன்றம் நடைபெற்றது.தாய் மொழி மிகவும் முக்கியம்.ஆனால் பல
மொழிகளை தெரிந்து வைத்து கொள்வது மிகவும் உதவியாக இருக்கும் என்று நான்
சொன்னதை அவர்கள் எல்லோரும் தாராளமாக ஏற்று கொண்டார்கள் .கார்த்திகேயன்
என்கிற மாணவர் என்னை மிகவும் மகிழ்வித்த மொழி எது என்று கேட்டார்.நான்
மிகவும் மகிழ்வித்த மொழி அரபிக் என்று சொன்னேன்.அதன்
கையெழுத்தும்,பேச்சு,மொழி,உச்சரிப்பும் ,தெளிவான பொருளும் அந்த மொழி என்னை
வசீகரித்தது என்று சொன்னேன்.பிறகு ராஜீ என்கிற மாணவி எனக்கு மிகவும்
பிடித்த ஆசிரியர் பற்றி கேட்டார்.நான் திரு.எ .சீனிவாச ராகவ் அவர்களை
பற்றி சொன்னேன் ,அவர்தான் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்.மாணவர்கள்
என்னை விடவேயில்லை.பரத்குமார் என்கிற மாணவர் நான் IASக்கு சென்றதை பற்றி
மிகவும் தோண்டி விசாரித்தார்.நான் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ,என்
தந்தையின் அழுத்தத்தின் காரணமாக அரசு பதவிக்கு வந்தேன் என்று ஒத்து
கொண்டேன்.சின்னம்மாள் என்ற மாணவியின் கேள்வியினால் நான் "கிட்டிபுள்"மீது
வைத்திருந்த ஆசையை பற்றி ஒரு மிகவும் நகைச்சுவையான விஷயத்தை பகிர்ந்து
கொண்டேன்.கடைசியில் கிருத்திகா என்ற மாணவி கேள்வியால் என்னை கவிழ்த்து
விட்டார்.எனக்கு மிகவும் பிடித்த நண்பர் யார் என்று கேட்டார் ? 62
வருடங்கள் எனக்கு நெருங்கிய நண்பராக இருந்த KR .V.சுப்பிரமணியன்
சமீபத்தில் தான் மறைந்தார்.அதை சொல்லும்போதும்,அவருக்கும் எனக்கும் இருந்த
நட்பை சொல்லும்போதும் நான் மனம் உடைந்து போனேன்.
சுருங்க சொல்லின் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கற்று
கொண்டோம்.ரிச்சர்ட் பாக்ஸ் ஜொனாதன் லிவிங்ஸின் சீகல் பற்றி இங்கு சொல்வது
மிகவும் பொருத்தம்.உயர,உயர பார்ப்பது தான்
ரிச்சர்ட் பாக்ஸ் ஜொனாதன் லிவிங்ஸின் சீகல் ஆகும் .இதனை தமிழில்
சொல்வதானால் உயர,உயர பறந்து ,இன்னும் மேலும் பறந்து ,அதற்கும் மேலே பறந்து
உலகத்தை கவனிக்கும் கருடன் பறவை போல இந்த பள்ளி மாணவர்கள் கருடன் பறவை
மாதிரி ஒவ்வொரு படி ,படியாக முன்னேற வேண்டும் என்பது பற்றி நான் பேசினேன்
.அது அவர்களுக்கு மிகவும் பிடித்ததாக அமைந்து விட்டது.இதை பற்றி நான் சில
கதைகள் கூறினேன்.ஜொனாதன்
லிவிங்ஸின் சீகல் அதனை முன் மாதிரியாக வைத்து கொண்டு நாம் எப்படி
வாழ்க்கையில் முன்னேறலாம் என்பது பற்றி பல கதைகள் சொன்னேன்.நமது குழந்தைகள்
அப்படியே சொக்கி போனார்கள் .மறுபடியும் ஓரு முறை வந்து அவர்களிடம் பேச
வேண்டும்.
ராமரின் அம்பு பறந்தது போல் நல்ல செய்திகள் வேகமாக பரவும்.ஏப்ரல் 15 அன்று
என்னுடன் இந்திய தணிக்கை துறையில் வேலை செய்த நண்பர்களுடன் ஒரு கூட்டம்
நடைபெற்றது .அப்போது இந்த பள்ளியை பற்றி,நான் அவர்களுடன் கலந்துரையாடியதை
பற்றி விலாவரியாக கூறினேன். .இந்த பெரியவர்களும் சொக்கி
போனார்கள்.அத்துடன் இல்லாமல் அவர்களும் மேலும் பல நினைவுகளை
கூறினார்கள்.நம் இந்தியா முன்னேற ,பல வழிகளில் இந்தியா முன்னேற இது மாதிரி
பள்ளிகள்தான் வேண்டும்.இவ்வாறு அந்த லண்டனிருந்து வெளியாகும்
சஞ்சிகை Confluence.வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment