தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், தேர்வு முடிவுகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.
பொறியியல் படிப்புக்கும் அடுத்த கல்வி ஆண்டு முதல் நீட் எழுத வேண்டும். நீட் தேர்வில் இடம் பெறும் பெரும்பாலான கேள்விகள் பிளஸ் 1 வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதால், பிளஸ் 1 வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப இப்போதே பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டத்தில் இந்த பயிற்சிக்கான பகுதிகள் சேர்க்கப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பு இன்று சட்டப் பேரவையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 1 தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பும் இன்று வெளியாகும். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பள்ளிகளில் எந்த நேரங்களில் தொடங்கும், பள்ளி ஆசிரியர்களே நடத்துவார்களா அல்லது சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா என்பதும் அறிவிப்பில் வெளியாகும்.

No comments:
Post a Comment