தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீதஇட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்கள், சம்மந்தப்பட்ட பள்ளிகளில் காலி யாக உள்ள இடங்களுக்கு ஜூன் 20-ம் தேதி சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச் செல்வன்நேற்று வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேர்க்கைக்கான குழந்தைகளை தேர்வு செய்யும் பணி கடந்த மே31-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளில் ஒரு சிலர் சேர்க்கைக்கு வராத காரணத்தால் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தொடர்புடைய பள்ளிகளில் ஜூன் 20-ம் தேதி சேர்க்கை வழங்கப்பட உள்ளது.ஜுன் 20-ல் சேர்க்கைஎனவே, ஏற்கெனவே இணைய வழியாக விண்ணப்பித்து சேர்க்கைக்குதேர்வு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர்கள் ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்கு சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று காலியாக உள்ள இடத்தில் சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment