- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 24 June 2017

காசை பார்த்து ஆசை மாணவரின்  எண்ண வெளிப்பாடு 


 ஹெட்மாஸ்டரின் பேச்சை கேட்டு ஆசையை அடக்கிய 6ம் வகுப்பு மாணவரின் பேச்சு
காசை பார்த்து ஆசை ஆனால் ஹெட்மாஸ்டர் பேச்சுதான் கண் முன்பாக வந்தது மாணவரின் உண்மையான எண்ண வெளிப்பாடு

கோவிலில்  உண்டியல் எண்ணும்போது காசை பார்த்த உடன் ஆசையாக தான் இருந்தது .ஆனால் ஹெட்மாஸ்டர் சொன்னத நினைத்து எனது மனதின் ஆசையை  கை விட்டு என்னை நானே சரி செய்து கொண்டேன்..6ம் வகுப்பு மாணவனின் உண்மையான பேச்சு

தேவகோட்டை - தேவகோட்டையில் உள்ள கோவிலில் உண்டியல் காசு மற்றும் பணம் எண்ணுவதற்காக சென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் 6ம் வகுப்பு மாணவனின் அனுபவத்தை நீங்களே கேளுங்கள் :
                                         நான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னையும்,எனது நண்பர்களையும் இன்று தேவகோட்டையில் உள்ள சிலம்பணி விநாயகர் கோவிலில் உண்டியல் எண்ணுவதற்காக அழைத்து சென்றார். எங்கள் பள்ளியில் இருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக கோவிலில் காசு எண்ண  அழைத்து செல்கிறார்கள்.கோவில் உண்டியல் காசு என்ன செல்வது எனக்கு இதுவே முதல் முறை ஆகும்.அங்கு கோவில் உண்டியலில் இருந்து காசுகளை என் முன்பாகவும்,எனது நண்பர்கள் முன்பாகவும் மலைப் போல கொட்டினார்கள்.எனக்கு அதனை பார்த்த உடன் பெரிய அதிசயத்தை பார்ப்பது போன்று இருந்தது.அப்போது எனக்கு அந்த காசுகளில் கொஞ்சத்தை எடுத்து கொள்ளலாம் என ஆசை வந்தது.அதனை எனது நண்பர்களிடமும் சொன்னேன்.அப்போதுதான் எனது பள்ளி தலைமை ஆசிரியர் உண்டியல் என்ன வருவதற்கு முன்பாக காலையில்  பள்ளியில் எங்களிடம் பேசும்போது ,உங்களை போன்று இளம் வயதில் உண்டியல் எண்ண செல்வது என்பது மிகப்பெரிய விஷயம்.அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.கோவிலில் உங்கள் முன்பாக காசுகளும்,பணமும் குவிந்து கிடக்கும் .அவற்றை பார்த்து மலைத்து போகாமல் ,எந்தவிதமான ஆசைகளுக்கும் இடம் கொடுக்காமல் மனதை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ள வேண்டும்.அது கோவில் காசு.நாம் அடுத்தவருடைய எந்த பொருளுக்கும் ஆசை படக்கூடாது.எனவே காசுகளை எண்ணி கொடுத்து விட்டு நல்ல பெயருடன் வரவேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பியது எனது ஞாபகத்துக்கு வந்தது.உடனே எனது ஆசையை கை விட்டு விட்டேன்.மேலும் உண்டியல் எண்ணும்  இடத்தில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களும் ,புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களும் குவிந்து கிடந்தன.பல வெளிநாட்டு பணமும் அதிகமாக இருந்தன.வெளிநாட்டு பணத்தில் கை வைத்து பார்த்தால் அவை கண்ணாடி போன்று நமது கையை காட்டின .எனக்கு இது பெரிய ஆச்சரியமாக இருந்தது.நான் இவ்வளவு காசுகளையோ,பணத்தையோ இது வரை பார்த்தது இல்லை.எனக்கு இது புது அனுபவமாக இருந்தது.கண்டிப்பாக மீண்டும் இது போன்று உண்டியல் என்ன வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.அதிசியமாக நான் பார்த்த தகவல்களை எனது வீட்டின் அருகில் உள்ள அனைவரிடமும் சொல்லி மகிழ்வேன்.எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சொன்னதை எப்போதுமே மறக்கமாட்டேன்.அதனை நினைவில் வைத்து செயல்படுவேன்.இவ்வாறு மாணவர் ஐயப்பன் கூறினார்.
                              இந்த நிகழ்வு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :எங்கள் பள்ளியில் இருந்து தொடர்ந்து நான்கு வருடமாக இளம் வயது மாணவர்கள் உண்டியல் என்ன செல்கின்றனர்.உண்டியல் எண்ண செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு பள்ளியில் மன ரீதியான பயிற்சி வழங்கப்படும்.பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் சுமாராக உள்ள சூழ்நிலையில் உள்ளதால் அவர்களிடம் நேர்மை தொடர்பாகவும்,அங்கு உள்ள காசு குவியலை எண்ணுவதற்கும் முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.மனதளவில் அவர்களை முதலில் ஊக்குவித்து பின்பு கோவிலில் உண்டியலில் இருந்து மலைப் போன்று குவிக்கப்படும் காசுகளை எவ்வாறு பாதுகாப்பாக எண்ணுவது என்றும்,அதனை பார்த்த உடன் இயல்பாக நமக்கு வரும் ஆசையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் மனதளவில் தயார்செய்யப்பட்டு பின்புதான் உண்டியல் எண்ணும் சேவைக்கு அழைத்து செல்ல படுகின்றனர்.இந்த இளம் வயதில் மாணவர்கள் தாங்கள் இந்த வயதில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத காசு குவியலை,பண நோட்டுக்களை பார்த்த உடன் அவர்கள் மனதில் எழும் ஆசைகளை அடக்கி முறையாக பணத்தை எண்ணி அதனை அடுக்கி,கட்டி வைத்துவிட்டு நல்ல பெயருடன் வெளி வரும்போது அவர்களுக்கு அதனால் மிகுந்த மனமகிழ்ச்சி ஏற்படுவதுடன் ,இனி அவர்கள் வளரும் காலங்களில் இது போன்று எங்காவது ஆசை ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் தாங்கள் இளம் வயதில் நேர்மையாக இருந்த சூழ்நிலையை எண்ணி நல்ல நிலைக்கு வருவார்கள் என்பது உறுதி.நாம் இளம் வயது பள்ளி பருவத்திலேயே எப்படி ஆசையை கட்டுப்படுத்தி நன்றாக இருந்தோம் என்ற எண்ணமே அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு கொண்டு வந்து சேர்த்து விடும்.மேலும் உண்டியல் எண்ணச்செல்லும்போது பல நபர்களை அவர்கள் சந்திக்கின்றனர்.தமிழக அரசின் இந்து சமய நிலைய அதிகாரிகள்,கோவில் ஆய்வாளர்கள் , கோவில் சிப்பந்திகள்,வங்கி அதிகாரிகள்,கோவில் செயலர்கள்,கிராமத்து கோவிலுக்கு செல்லும்போது அங்குள்ள கிராமத்து நிலைமை,அதன் காரியக்காரர்கள் என அனைவைரையும் சந்திக்கும் வாய்ப்பும்,அத்துணை ஆளுமைகளிடமிருந்து அவர்களுக்கு பல்வேறு நல்ல செயல்பாடுகளும்,பிற்காலத்தில் தாங்களும் இவ்வாறு வர வேண்டும் என்கிற எண்ணமும் இளம் வயதில் நல்ல எண்ணங்களாக மனதில் விதைக்க படுகிறது.பல ஆயிரம் ரூபாய்களையும் மிக விரைவாக எண்ணி கட்டு கட்டி அதனை பாதுகாப்புடன் கொடுக்க கூடிய பக்குவத்தினை எங்கள் பள்ளி மாணவர்கள் இப்போது பெற்றுள்ளனர்.அதற்கு உதவிய கோவில் செயல் அலுவலர்க்கும்  மற்ற தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறையின் அதிகாரிகளுக்கும்,கோவில் காரியக்காரர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.பொருளாதார ரீதியில் சுமாராக இருக்கும் இந்த மாணவர் ஆசையை போன்று மாணவர்களின் மன நிலையினை பக்குவப்படுத்தும் விதமாகத்தான் இந்த வாய்ப்பினை நான் பார்க்கின்றேன்.ஏனெனில் மாணவர்ளுக்கு 6,7,8 வகுப்பு பயிலும்போது மனதில் பதியும் எண்ணங்கள் அவர்களின் வாழ்க்கை முழுவதும் மறக்காமல் அதனை பயன்படுத்தும் எண்ண நிலைக்கு உள்ளாவார்கள்.அதற்கு  சரியான வழியில் பயிற்சி அளிப்பதே எங்கள் பணி .அதனை திறம்பட செய்து வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.என்று பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.

பட விளக்கம் : ஹெட்மாஸ்டரின் பேச்சை கேட்டு ஆசையை அடக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் ஐயப்பனின் பேச்சு

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot