தொழில் நிறுவன ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை தினங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
மாநிலத்தில் ஏதேனும் அவசர நிலை அல்லது சிறப்புச் சூழ்நிலைகளின்போது குறிப்பிட்ட தினங்களில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களிடம் அரசு வலியுறுத்தி வருகிறது.
ஆனால், சில நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படுவதில்லை என்று அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
தற்போது தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறையை அறிவிப்பதற்கான அதிகாரம், 1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்படி அரசுக்கு இல்லை. இதனால் சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment