- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 19 June 2017

 விகடன் நிருபர்கள்  மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தல்

பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டி!

 அரசு ,அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி அளவில் சிவகங்கை,ராமநாதபுரம் ,புதுகோட்டை மாவட்ட அளவில் பங்கேற்ற ஒரே பள்ளி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 

    விகடன்  இதழின் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டிகளில்  பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் ( தொடர்ந்து நான்காவது  ஆண்டாக இபோட்டிகளில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது )



 விகடன்  இதழ் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேனா பிடிக்கலாம் ,பின்னி எடுக்கலாம் என்கிற சுட்டி ஸ்டார் போட்டி காரைக்குடி  மையத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பாக 6 மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.

                     அரசு விடுமுறை நாளன்று பெற்றோர் செல்ல இயலாத நிலையில்    காலை  7.50 மணிக்கெல்லாம் 6 மாணவர்களையும் ஆசிரியர் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு க்கு அழைத்து சென்றார்.அரசு ,அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி அளவில் சிவகங்கை,ராமநாதபுரம் ,புதுகோட்டை மாவட்ட அளவில் இப்பள்ளி மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. மதியம் 2 மணிக்கு போட்டிகள் முடிந்து மாணவர்களுக்கு சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.பள்ளி விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு இப்பள்ளி ஆசிரியை  பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                     போட்டியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் மிக அதிக அளவிலான போட்டிகளில் பங்கேற்று பெற்ற சான்றிதழ்களை விகடன் நிருபர்களிடம் காட்டியபோது ,அவர்கள் வேறு எந்த பள்ளியும் இது போன்று சான்றிதகள் பெறவில்லை.உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot