நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்காமல் இருக்க உள் இடஒதுக்கீடு வழங்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை: பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday, 15 June 2017

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்காமல் இருக்க உள் இடஒதுக்கீடு வழங்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை: பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நீட் தேர்வு முடிவை வெளியிடஉச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உள் இடஒதுக்கீடு வழங்கலாமா என சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) எழுந்து, ‘‘நீட் தேர்வு பிரச்சினையில் தமிழக அரசின் கொள்கை முடிவு என்ன? இப்பிரச் சினையால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள் ளது. நீட்தேர்விலிருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பவில்லை எனக் கூறப் படுகிறதே?’’ என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கொள்கை முடிவு. இந்த நிமிடம் வரை இந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்.

 மத்திய அரசிடம் போராடி கடந்த ஆண்டு நீட் தேர்விலிருந்துவிலக்கு பெற்றோம். இந்த ஆண்டு விலக்கு பெறுவதற்காக சட்டப்பேரவையில் இரண்டு மசோதாக்களை நிறை வேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். இது தொடர் பாக பிரதமர் மோடியை முதல்வர் கே.பழனிசாமி 2 முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.மத்திய சுகாதாரம், சட்டம், மனித வள மேம்பாடு ஆகிய துறை களின் அமைச்சர்களை நானும், அதிகாரிகளும் நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு சாதகமான பதி லைத் தருமாறு வலியுறுத்தினோம். ஆனாலும், அவர்கள் சாதகமான பதிலை அளிக்கவில்லை. தற்போது இந்த சட்ட மசோதா மத்திய உள் துறை அமைச்சகத்தின் பரிசீலனை யில் உள்ளது. இதுவரை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப் பப்படவில்லை.

அரசின் கொள்கை முடிவு

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மதுரை உயர் நீதிமன்றம் தடை விதித் திருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட பிரமாணப் பத்திரத்தில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதை தெளிவுபடுத்தி உள்ளோம். நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.இந்தச் சூழலில் கிராமப்புற மாண வர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உள் இடஒதுக்கீடு வழங்க லாமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘அறுவை சிகிச்சை வெற்றி. நோயாளி மரணம் என்பது போலவே நீட்தேர்வு பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன

.இன்னும் ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்? டெல்லியில் போய் கேட்டிருக்க வேண்டாமா?’’ என கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசுதான் நீட் தேர்வு சட்டத்தை கொண்டு வந்தது. எனவே, நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுக தான் காரணம்’’ என குற்றம் சாட்டினார்.அதற்கு விளக்கம் அளித்த துரைமுருகன், ‘‘நாங்கள் செய்ய வில்லை என்பதால்தான் உங் களை பதவியில் உட்கார வைத்துள்ளார்கள். நீங்களும் செய்யாவிட்டால் எப்படி?’’ என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot