பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 28 July 2017

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

''பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்,'' என, தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினரால், அக்கட்சியின் நிறுவனர், முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, மாவட்டந்தோறும் கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆகஸ்ட் 30ல் விழா நடக்கிறது. விழாவிற்கான இடத்தை தேர்வு செய்ய, நிதியமைச்சர் ஜெயகுமார், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று காலை காஞ்சிபுரம் வந்தனர். முன்னதாக, விழா நடத்த ஏதுவான இடங்களை, வண்டலுார் மற்றும் காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, காஞ்சிபுரம் காமராஜர் சாலை, தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க., அம்மா அணி நிர்வாகிகளுடன், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் பங்கேற்றனர். பின், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், நுாற்றாண்டு விழா தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடந்தது. அப்போது, வண்டலுார் அடுத்த ஊரப்பாக்கம், வி.ஜி.பி., மைதானத்தில் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார். கூட்டம் முடிந்த பின், நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்படி இருக்குமோ என்ற அச்சம், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உள்ளது. எனவே, மாதிரி வினாத்தாள்கள், திங்கட்கிழமை வெளியிடப்படும். பின், தேர்வை எப்படி எழுதலாம் என்ற வழிமுறை உருவாக்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 பாட திட்டங்கள், 12 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை.அதை மாற்றியமைக்க, கல்வியாளர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், முன்னாள்,இன்னாள் துணைவேந்தர்களும் இடம் பெற்றுள்ளனர். கல்வியில் முன்மாதிரியாக தமிழகத்தை உருவாக்குவதற்குஏற்ப, பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.

வரும், 2018- -19ம் கல்வியாண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும், 2019 - -20ம் கல்வியாண்டில், 2, 7,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், 2020 - -21ம் கல்வியாண்டில், 3, 4, 5, 8ம் வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கை துரிதமாக நடக்கிறது. இதற்காக, 54 ஆயிரம் கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தயார் செய்து வருகிறோம்.'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெற, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot