தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு புதிதாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற் கான பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வு வாரியத்தால் 2014-ல் சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 10 ஆயிரத்து 99 நபர்களில், 8 ஆயிரத்து 500 பேர் இரண்டாம் நிலைக் காவலர்களாகத் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு, மேலும் 10 ஆயிரத்து 500 பேர், 2017 மற்றும் 2018-ம் ஆண்டில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, "தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர அடுத்த மாதம் 23-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. இதனை அனைத்து தபால் நிலையங்களிலும் பெற் றுக் கொள்ளலாம். அக்டோபர் 1-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. தேர்வு நாள் நவம்பர் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
No comments:
Post a Comment