250 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தி உத்தரவு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 23 July 2017

250 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தி உத்தரவு.

2017-2018-ம் கல்வி ஆண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளாகவும், 150 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டது.
அதன்படி, 100 அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும், 150 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்டுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியி யல், உயிரியல், வரலாறு, பொரு ளாதாரம், வணிகவியல் ஆகிய பாடங்களில் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 900 இடங் களுக்கும், தரம் உயர்த்தப்பட்டுள்ள 150 உயர்நிலைப் பள்ளிகளில் தலா 5 பட்டதாரிஆசிரியர் வீதம் 750 பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களுக்கும் அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயச்சந்திரன் இரு அரசாணைகளாக வெளி யிட்டுள்ளார்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமன முறையிலும், எஞ்சிய50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும். அந்த வகையில், 250 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் 450 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 375 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் நேரடி நியமன முறையின்கீழ் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு மூலமாகநிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot