5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை....மசோதா தாக்கல் செய்கிறது மத்திய அரசு… - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 21 July 2017

5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை....மசோதா தாக்கல் செய்கிறது மத்திய அரசு…

5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு,விரைவில் இதற்கானமசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

‘குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி மசோதா’ குறித்து மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது, கேட்கப்பட்ட கேள்விக்கு  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்து பேசியதாவது-5 முதல் 8-ம் வகுப்பு வரை பயில்பவர்கள் கண்டிப்பாக தேர்ச்சிபெறச் செய்ய வேண்டும் என்கிற முறை முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.

இதன்படி, மார்ச் மாதம் ஒரு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால், அவருக்கு மே மாதம் மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.அப்போதும் அவர் தோல்வி அடைந்தால் மட்டுமே, அவர் அதே வகுப்பில் மீண்டும் படிக்க அமர்த்தப்படுவார். இது தொடர்பான மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 16-ன்கீழ் கட்டாயத் தேர்ச்சி என்ற கைவிடப்படுகிறது. மேலும், மாணவர்களை 8-ம் வகுப்பு வரை பள்ளியில் இருந்து நீக்குவதும் தடை செய்யப்படுகிறது.

குழந்தைகளை தேர்வில் தோல்வி அடைந்தால், மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைப்பது அவர்களை மனச்சோர்வடையச் செய்யும், சில நேரங்களில் பள்ளிப்படிப்பை கைவிட வேண்டியது இருக்கும் என்பதால் கட்டாயத் தேர்ச்சி கொண்டு வரப்பட்டது. ஆனால், சில மாநிலங்கள் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கட்டாயத் தேர்ச்சி முறையால்,மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறது என்று கவலைகொண்டன. இதையடுத்து இந்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot