மின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 25 July 2017

மின் வாரியத்தில் 950 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட 950 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மின் வாரியத்தில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளன.
இதனால், ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து வரு கிறது. ஊழியர்களின் வேலைப் பளுவை குறைக்கும் வகையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி 325 உதவி பொறி யாளர்கள், 300 தொழில்நுட்ப உதவி யாளர்கள், 250 இளநிலை உதவி யாளர்கள், 400 உதவியாளர்கள், 300 கணக்கீட்டாளர்கள் என, 1,925 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்டார்.

இந்நிலையில், முதற்கட்டமாக 250 இளநிலை உதவியாளர்கள் - கணக்கு, 300 தொழில்நுட்ப உதவியாளர்கள், 400 உதவியாளர் கள் என 950 காலி பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பு வதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். விரைவில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனமின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot