அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ - ஜியோ அமைப்பு மனு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 13 July 2017

அரசு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ - ஜியோ அமைப்பு மனு

7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை, ஓய்வூதிய திட்ட மாற்றம் உள்ளிட்ட அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் கால வரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று கூறி ஜாக்டோ -ஜியோ அமைப்பு முதல்வர் கே.பழனிசாமியிடம் மனு அளித்துள்ளது.
ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன் மற் றும் ஜெ.கணேசன் மற் றும் நிர்வாகிகள் நேற்று முதல்வர் கே.பழனி சாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

63 சங்கங்கள்

தமிழகத்தின் அனைத்து அரசு ஊழியர்- ஆசிரி யர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவின் கூட்டம் கடந்த 11-ம் தேதி நடந்தது. இதில் 63 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல் படுத்த அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் பணிக் காலம் மேலும் 3-மாதங் களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளதற்கும், புதிய ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு இதுவரை அறிக்கை அளிக் காததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்படி மாநில அரசின் 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல் படுத்தும் முன், 20 சதவீத இடைக்கால நிவாரணம் மற்றும், பழைய ஓய் வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பது தொடர்பான அறி விப்புகளை சட்டப்பேரவை கூட்டத்தில் வெளியிட வேண்டும்.

18-ல் ஆர்ப்பாட்டம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி மாலை 5மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தொடர்ந்து ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணிக்கு மாநில அளவில் சென்னை கோட்டை நோக்கி அரசு ஊழியர்- ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்தப்படும். கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற் கொள்வது குறித்து முடி வெடுக்கப்படும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot