மாணவர்களை பெரிதும் கவர்ந்த பி.காம், பிபிஏ படிப்புகள்: பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புக்கு மாணவிகளிடம் வரவேற்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 6 July 2017

மாணவர்களை பெரிதும் கவர்ந்த பி.காம், பிபிஏ படிப்புகள்: பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புக்கு மாணவிகளிடம் வரவேற்பு.

இந்த ஆண்டு கலை அறிவியல் கல்லூரி களில் பிகாம், பிபிஏ படிப்புகள் மாணவர் களை பெரிதும் கவர்ந்துள்ளன. அதே நேரத்தில் மாணவிகள் மத்தி யில் பிஏ ஆங்கில இலக்கிய படிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்பு மீதான மோகம் மாணவ-மாணவிகள் மத்தியில் குறைந்து அவர்களின் பார்வை கலைஅறிவியல் படிப்புகள் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது.

இதுபற்றி கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியை ஜெ.மஞ்சுளா கூறுகையில், “தற்போது, கலை அறிவியல் படிப்பு களில் சேரும் ஆர்வம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பி.காம் படிப்பில் சேர அதிக விண்ணப்பங்கள் வந்தன. அதற்கு அடுத்தபடியாக பிஏ (ஆங்கில இலக்கியம்), பிபிஏ, பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல்போன்ற படிப்புகள் அதிகளவில் மாணவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட படிப்பில் சேர அதிக எண்ணிக்கையிலான விண் ணப்பங்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப் பட்ட பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று இடங்களை கல்லூரிகள் அதிகரித் துக் கொள்ளலாம். அந்த வகையில், பல கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன” என்றார்.

சென்னை மாநில கல்லூரி முதல்வர் பேராசிரியர் பிரம்மானந்த பெருமாள் கூறும் போது, “எங்கள் கல்லூரியில் பி.காம். படிப்பில் பி.காம். (பொது), பி.காம் (கார்ப்ப ரேட் செக்ரட்டரிஷிப்) என இரண்டு வகையான படிப்புகள் உள்ளன. இந்த 2 பி.காம். படிப்புகளும் உடனடியாக நிரம்பிவிட்டன. அதேபோல், பிஎஸ்சி படிப்புகளுக்கும் பெரிதும் டிமாண்ட் இருந்தது” என்றார்.கலை அறிவியல் படிப்புகள் குறிப்பாக பிகாம், பிபிஏ, பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம் போன்ற படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முன்னாள் இணை இயக்குநரும், கல்விஆலோசகருமான நடராஜன் கூறுகையில், “தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பொறியியல் கல்லூரி களில் மட்டுமல்லாமல் கலை அறிவியல் கல்லூரிகளிலும் கேம்பஸ் இண்டர் வியூ வைத்து வேலைக்கு மாணவர்களை தேர்வுசெய்கி றார்கள். பல ஐ.டி. நிறுவனங்கள், நிதிச்சேவைகள், தகவல் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பி.காம், பிபிஏ படித்தவர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து பணி யமர்த்திக் கொள்கின்றன.

கணக்கு துறையில் தொழில் ரீதியாகவளர விரும்புவோர் தங்களுக்கான அடிப்படை தகுதியாக பி.காம், பிபிஏ படிப்புகளை பார்ப்பதால் அந்த படிப்புகள் அதிகம் தேர்வு செய்யப்படுகின்றன” என்று தெரிவித்தார்.கல்வி ஆலோசகர் நெடுஞ் செழியனிடம் கேட்டபோது, “பொறியியல் படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர் களையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் மாணவர் களும், பெற்றோரும் நேரடி யாகவே பார்க்கிறார்கள். இதன் காரணமாக, தானாகவே அவர்களின் பார்வை கலை அறிவியல் படிப்புகள் பக்கம் திரும்பியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot