எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு வந்து செல்லும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோருக்கான போக்குவரத்து செலவாக, மாதம், 250 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவது, பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களின் தன்மைக்கேற்ப கல்வி வழங்கப்படுகிறது. கை, கால் ஊனமுற்ற, மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, தாலுகா வாரியாக செயல்படும், பகல் நேரபாதுகாப்பு மையங்களில், சிறப்பாசிரியர்கள் மூலம், பிரத்யேக பயிற்சிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகின்றன.மையத்துக்கு, தங்கள் குழந்தைகளை அழைத்து வரும், ஏழை, எளிய, வறுமை நிலையில் இருக்கும் பெற்றோரின் போக்குவரத்து செலவை ஈடுகட்ட, மாதம், 250 ரூபாய், எஸ்.எஸ்.ஏ., சார்பில் வழங்கப்படுகிறது.இது போதுமானதாக இல்லாததால், பலர், பாதுகாப்பு மையங்களுக்கு, குழந்தைகளை அனுப்ப மறுக்கின்றனர்.பெற்றோர் சிலர் கூறுகையில், 'இலவசம் என்ற பெயரில், பல கோடி ரூபாயை அரசு செலவழிக்கிறது. அதே நேரம், எங்கள் குழந்தைகளின் நலன் கருதி, போக்குவரத்து செலவு தொகையை உயர்த்தி வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
நிதி ஒதுக்கீடு உயருமா? :
எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுனர்கள் கூறியதாவது: மாற்றுத்திறனாளி குழந்தைகள், தாங்களாகவே, கழிப்பறை செல்வது, பல் துலக்குவது, குளிப்பது, உணவு உண்பது, உடை மாற்றுவது என, அன்றாடப் பணிகளை செய்து கொள்ளும் வகையிலான பயிற்சிகளை, பகல் நேர பாதுகாப்பு மையங்களில் வழங்கி வருகிறோம்.மையங்களுக்கு, பெரும்பாலும், ஏழை, எளிய மக்களே குழந்தைகளை அழைத்து வருவதால், அவர்களுக்கான போக்குவரத்து செலவை, உயர்த்தி வழங்குவது அவசியம். எஸ்.எஸ்.ஏ., சார்பில், பிற திட்டங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படும் நிலையில், இத்திட்டத்துக்கு மட்டும் குறைந்தளவே நிதி ஒதுக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment