நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு... நாளை அறிவிப்பாரா பிரதமர்? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 26 July 2017

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு... நாளை அறிவிப்பாரா பிரதமர்?

இந்தியாவின் 14 வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் 15 நிமிடங்கள் தனியாகப் பேசினார் முதல்வர்.
இந்தச் சந்திப்பின் போது நடந்த விவரத்தை டெல்லி அ.தி.மு.க பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். அதற்கு அவர், '' 'நீட்' தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் கோரிக்கையை முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்திச் சொன்னாராம். அதற்கு பிரதமர், 'என்ன பழனிசாமி, ரொம்ப பிரஸர் கொடுக்கிறீர்களே' என்று சிரித்தபடி கேட்டாராம். 'தமிழகத்தில் இந்த பிரச்னையில் தி.மு.க அரசியலாக்கப்பார்க்கிறது. கடந்தசில வருடங்களாக தமிழக கல்வித்துறையில் பெரிய மாற்றம்ஏதும் கொண்டுவரவில்லை. இந்தச் சூழ்நிலையில், நீட் தேர்வு எழுத எங்கள் மாநில மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஒன்று அல்லது இரண்டு ஆண்டு விலக்கு கொடுத்தால் போதும்! அதற்குள் மாணவர்கள் சுதாரித்துவிடுவார்கள்' என்று சொன்னாராம்.உடனே, பிரதமர் அவரது கேபினில் உள்ள அதிகாரிகளை அழைத்து சில உத்தரவுகளைப் பிறப்பித்தாராம்.

பிரதமர் - முதல்வர் சந்திப்பு முடிந்ததும் பிரதமர் அலுவலக அதிகாரிகளும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் அவசரமாகக் கூடி விவாதித்தார்களாம். பிரதமர் அலுவலக அதிகாரிகள் கேட்ட சில விவரங்களை கிரிஜா வைத்தியநாதன், சென்னை தலைமைச் செயலகத்துடன் தொடர்புகொண்டு போனில் வாங்கி ஃபைல் ரெடி பண்ணி கொடுத்தாராம்" என்றார் அவர்.தலைமைச் செயலாளர் கொடுத்த ஃபைல் விவரங்களை பிரதமர் கவனத்துக்கு உடனே கொண்டு சென்றார்களாம். இதையடுத்துதான், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நேரத்தில், தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விசிட் செய்யும் நாளும் வந்தது. நாளை (27.7.17) அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினம்.

ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சி மடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க வருகிறார். இதற்காகத் தனி விமானத்தில் நாளை காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.விழாவில் பேசும்போது, 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்று பி.ஜே.பி. வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

அதே நேரம், தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில், "மத்திய அரசின் ஆலோசனைபடி, மாநில அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓராண்டு விலக்கு அளிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக சட்டசபையில் கொண்டு வர தீவிர ஆலோசனை நடக்கிறது. இதற்கு மத்திய அரசு பச்சை சிக்னல் காட்ட இருக்கிறது. அதனால், ஆளுநரும் உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இது விஷயமாக ஒரு தகவலை பிரதமர் ராமேஸ்வரத்தில் அறிவிப்பார் என்று நம்புகிறோம். எப்படியோ, பிரதமர் விசிட்டால் தமிழக மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது என்று சொல்லலாம்" என்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot