மாணவர்களும் பெற்றோர்களும் போராடினால் ‘நீட்’ தேர்வை தடுக்க முடியும்: முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் கருத்து - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 6 July 2017

மாணவர்களும் பெற்றோர்களும் போராடினால் ‘நீட்’ தேர்வை தடுக்க முடியும்: முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் கருத்து

மாணவர்களும், பெற்றோர்களும் போராடினால் நீட் தேர்வை தடுத்து நிறுத்த முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் கூறினார்.
நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்பு தலை பெற்றுத்தரக் கோரியும், அதுவரை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்துவதற்குஎதிர்ப்பு தெரிவித்தும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்றுஉண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது.

இந்த போராட் டத்தை தொடங்கிவைத்து முன் னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் பேசியதாவது:பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப் பெண் வாங்கினால் அரசு மருத்து வக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்கும் என்ற கனவை நீட் தேர்வு தகர்த்துவிட்டது. தமிழ்நாட்டில் 98.5 சதவீத மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில்தான் படிக்கி றார்கள். வெறும் 1.5 சதவீதம் பேர் மட்டுமே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள்.

மருத்துவ படிப் புக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை.நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகைசெய்யும் 2 மசோதாக்களை தமிழக அரசு சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகமத்திய அரசுக்கு 31.1.2017 அன்று அனுப்பிவைத்தது. ஆனால், இன்னும் இதுதொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக் களின் நியமனத்துக்கு மறுநாளே மத்திய அரசின் ஒப்புதல் கிடைக் கிறது.

நீட் பிரச்சினை மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டு மல்ல, மாநில அரசின் உரிமைப் பிரச்சினை.ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது ஏற்பட்ட மெரினா புரட்சி போல நீட் பிரச்சினைக்கும் மக்களி டையே எழுச்சி ஏற்பட வேண்டும். மாணவர்களும், பெற்றோர்களும் போராடினால்நீட் தேர்வை தடுக்க முடியும். சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடம் நீதிமன்றம் அல்ல. போராட்டங்கள் மூலமாகவே அவற்றுக்கு தீர்வு காண முடியும்.இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, “பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். நீட் தேர்வை கண்டித்து ஜனநாயக உரிமை கூட்டமைப்பு சார்பில் ஜூலை 12-ம் தேதி நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில் மாணவர் களும், பெற்றோர்களும் திரளாக பங்கேற்க வேண்டும்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் பேசும்போது, “நீட் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லி சென்று பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.திமுக எம்பிக்கள் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் கருணாஸ், உ.தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் இதில் கலந்துகொண்டு பேசினர்.

முன்னதாக, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு நீட் பிரச்சினை குறித்து அறிமுகவுரை ஆற்றி னார். ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வ லர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot