தொழிற்நுட்ப உதவியாளர் பதவிக்கு, நேர்காணல் நடத்தாமல், மின் வாரியம் தாமதம் செய்வது, பட்டதாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவுகளில், 525 தொழிற்நுட்ப உதவியாளர்கள், மெக்கானிக்கல், 900 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2016ல், அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வை நடத்தியது.அதில், தேர்வர்கள் எடுத்த மதிப்பெண்; நேர்காணலில் பங்கேற்பதற்கான, 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்களும், மூன்று மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. ஆனால் இதுவரை, அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை.
இது குறித்து, பட்டதாரிகள் கூறியதாவது:தொழிற்நுட்ப உதவியாளர் நேர்காணல் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால்,'சட்டசபை தொடர் முடிந்ததும் நடத்தப்படும்' என்றனர். அந்ததொடர் முடிந்து, இரு வாரங்களுக்கு மேல் ஆகியும், நேர்காணலுக்கான பணிகளை துவக்கவில்லை.ஜூலை, 9ல் உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. உடனே மதிப்பெண் வெளியிட்டு, நேர்காணலும் நடத்தி, ஆட்களையும் தேர்வு செய்து விட்டனர்.ஆனால், தொழிற்நுட்ப உதவியாளர் பதவிக்கு, நேர்காணலை நடத்தாமல், மின் வாரியம் பாரபட்சம் காட்டி வருகிறது.
தொடர் தாமதம், முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என்பதால்,அதை உணர்ந்து, அதிகாரிகள், விரைவாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment