பள்ளிக் கல்வித் துறையில் உதயசந்திரனின் அதிகாரம் குறைப்பு: 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 25 August 2017

பள்ளிக் கல்வித் துறையில் உதயசந்திரனின் அதிகாரம் குறைப்பு: 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்

பள்ளிக் கல்வித்துறை செயலராக இருந்த உதயசந்திரன், இனி பாடத்திட்ட மாற்றம் தொடர்பானவற்றை மட்டும் கவனிப்பதுடன் புதிய முதன்மை செயலர் பிரதீப் யாதவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் செயலராக கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி டி.உதயசந்திரன் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தின் போதுமுதன்மை செயலர் அந்தஸ்தில் இருந்த பள்ளிக் கல்வித்துறை செயலர் பதவி, செயலர் அந்தஸ்துக்கு குறைக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் உதயசந்திரன் மாற்றப்படலாம் என தகவல் வெளியானது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பாடத்திட்டத்தை மாற்றும் வரை அவரை மாற்றக் கூடாது என்று தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், நேற்று இரவு 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடம் தொடர்பான அறிவிப்பை தமிழக தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டார்.இதில், பள்ளிக் கல்வித்துறை செயலர் பதவி முதன்மை செயலர் நிலைக்கு உயர்த்தப்பட்டு, அதில் உணவுமற்றும் கூட்டுறவுத்துறை செயலராக உள்ள பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், டி.உதயசந்திரன் பள்ளிக் கல்வித்துறை செயலராக தொடர்வதுடன், பாடத்திட்ட மாற்றம் தொடர்பான விஷயங்களை மட்டும் கவனிப்பார். அவர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம்உயர் நீதிமன்ற உத்தரவை மீறாமல், அதே நேரம் உதயசந்திரன் அதிகாரத்தை தமிழக அரசு குறைத்துள்ளது.மேலும், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் பதவி கூடுதலாக, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் ஆர்.பழனிசாமியிடம் வழங்கப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot