தங்களிடம் உள்ள குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான விடைத் தாள்களை டிஎன்பிஎஸ்சியும், தனியார் தொலைக்காட்சியும் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2015-ம் ஆண்டு நவம்பரில் குரூப் 1 தேர்வை நடத்தியது. இதில் நான் தேர்ச்சி பெற்ற நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் முதன்மைத் தேர்வு எழுதினேன். அதை நான் சிறப்பாக எழுதியும், தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரத்துடன் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, இந்த குரூப்-1 தேர்வை ரத்து செய்து புதிய அறிவிப்பை வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை, இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க ஏற்கெனவேஉத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் சி.மணிசங்கர் ஆஜராகி, ‘‘டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுவிட்டன. இந்த தேர்வில் பங்கேற்றவர்களின் உண்மையான விடைத்தாள் என்று கூறி, அதைக்காட்டி தனியார் தொலைக்காட்சி செய்தி வெளி யிட்டுள்ளது. அந்த விடைத்தாள் கள் போலியானவை. அதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது நீதிபதி, ‘‘தேர்வு எழுதியவர்களின் உண்மையான விடைத்தாள் தன்னிடம் உள்ளது என்று தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு தேர்வு என்றால், ஒரு விடைத்தாள் தானே இருக்கமுடியும்? அது எப்படி 2 விதமான விடைத்தாள்கள் உள்ளன? போலீஸாரின் புலன் விசாரணையில்தான் உண்மை வெளியே வரும். ஆகவே இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அன்று தங்களிடம் உள்ள உண்மை யான விடைத்தாளை டிஎன்பிஎஸ்சி தலைவரும், தனியார் தொலைக் காட்சி நிறுவனமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.