கோவை: பிளஸ் 1க்கு பொது தேர்வு என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலையடுத்து,
இன்று வ.உ.சி. மைதானம் முன்பு நூறுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை பிளஸ் 1க்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தநிலையில், 'சேவ் பிளஸ் 1 ஸ்டூண்டன்ஸ்' என்ற பெயரில் பல்வேறு வெப்சைட்டுகள் மற்றும் பேஸ்புக்கில் அரசுக்கு எதிர்ப்பு காட்டி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் பரவியது. இது வாட்ஸ் அப்பிலும் வைரலாக பரவியதால் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போராட்டம் குறித்து தகவல் தெரிந்து கொண்டபோலீசார் முன்னெச்சரிக்கையாக வ.உ.சி. மைதானத்தில், நூற்றுக்கணக்கில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் திரண்டால் அவர்களை கலைப்பது சிரமம் என்பதால், அவர்களை கூடவிடாமல் முன்கூட்டியே தடுத்து நிறுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, வ.உ.சி மைதானத்தில் பல ஆயிரம் பேர் மாணவர்கள் திரண்டனர். தற்போது, பிளஸ் 1 மாணவர்களின் போராட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.