ஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு.. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 29 August 2017

ஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும்  நடைபெற்று வருகின்றன..


இந்த ஆண்டிற்கான போட்டி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..

பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டி :
*கனவு ஆசிரியர்*


ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி :
*என்னைச் செதுக்கிய புத்தகம்*

ஆர்வலர்கள் & பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டி :
*எங்க ஊரு.. எங்க பள்ளி..*

*குறிப்பு :*

👉 படைப்புகள்  A4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்..

👉🏼ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்ப வேண்டும்..

👉🏼படைப்புகள் புதியதாகவும் பங்கேற்பாளரின் சொந்த படைப்பாகவும் இருப்பது அவசியம்..

👉🏼போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்..

👉🏼சிறந்த படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் விஞ்ஞானச் சிறகு, துளிர், விழுது போன்ற இதழ்களில் பிரசுரிக்கப்படும்..

👉🏼 படைப்புகள் செப்.10 க்கு முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்..

👉🏼ஒவ்வொரு மாவட்ட வாரியாக பங்கேற்பாளர்கள் பட்டியலையும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற படைப்புகளையும் ஆசிரியர் தின போட்டிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு செப்.15 க்கு முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்..

*மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் விபரம் செப்.24 ல் நடைபெறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழுவில் அறிவிக்கப்படும்..

*www.tnsf.co.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படும்..

📞மேலும் விபரங்களுக்கு…
சாஸ்தா சுந்தரம்
மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின போட்டிகள் 2017
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
அலைபேசி: 9942190845

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot