அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர் பணியில் 1,325 காலியிடங்கள் முதல்முறையாக போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நடைபெறுகிறது.தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 27-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 18-ம் தேதி முடிவடைந்தது. சிறப்பாசிரியர் தேர்வுக்கு 37 ஆயிரத்து 900 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும் என்றும் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருமான (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் தெரிவித்தார்.