சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ ஈவார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
நீட் தேர்விலிருந்து தமிழகத் துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும், முதல்வர் பழனிசாமி பிரதமரை சந்திக்கும்போதெல்லாம் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்.மத்திய அரசு கொண்டுவரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் 54,000 கேள்வி-பதில்கள் அடங்கிய கையேட்டை சி.டி. வடிவில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் 2 மாதங்களில் தொடங்கும்.
மத்திய அரசின் தேர்வு களை எதிர்கொள்ளும் வகையில் 450 பயிற்சி மையங்களை தமிழகத்தில்அமைக்க உள்ளோம். சனிக்கிழமைதோறும் அந்த மையங் களில் 3 மணி நேரம் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.தனியார் பள்ளிகளுக்கு வழங் கப்படும் தடையில்லா சான்றை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து உள்ளோம். மாணவர்களின் நலன் கருதி 2,505 பள்ளிகளுக்கு தடை யில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இடவசதி குறைவாக இருந்து மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக உள்ள பள்ளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு தேவையான அனுமதியை அளித்துள்ளோம்.
இந்த காலகட்டத்துக்குள் மாணவர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில், சிஎஸ்ஐ இவார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஷீலா லாரன்ஸ், தாளாளர் லாயிடு பெஞ்சமின், சிஎஸ்ஐ சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment